KKR vs CSK: சிஎஸ்கேவின் தோல்விக்கான காரணமும், பெரிய சவாலா இருக்குற விஷயமும் இதுதான்..! தோனி அதிரடி

First Published Oct 8, 2020, 1:37 PM IST

கேகேஆருக்கு எதிரான தோல்விக்கு என்ன காரணம் என்றும் சிஎஸ்கே அணி மேம்பட வேண்டிய விஷயம் குறித்தும் கேப்டன் தோனி பேசியுள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசன் சிஎஸ்கேவிற்கு நல்லவிதமாக அமையவில்லை. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, அதன்பின்னர் ஹாட்ரிக் தோல்வி அடைந்தது.
undefined
பஞ்சாப்புக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கம்பேக் கொடுத்தது. எனவே சிஎஸ்கே வெற்றிப்பயணத்தை தொடரும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், கேகேஆருக்கு எதிராக 168 ரன்கள் என்ற இலக்கை விரட்டமுடியாமல் 157 ரன்கள் மட்டுமே அடித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
undefined
ஷேன் வாட்சன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 40 பந்தில் 50 ரன்களுக்கு வாட்சன் அவுட்டாகும்போது, அணியின் ஸ்கோர் 13.1 ஓவரில் 101 ரன்கள். வாட்சனுக்கு முன் டுப்ளெசிஸ் மற்றும் ராயுடு ஆகிய இருவர் மட்டுமே ஆட்டமிழந்திருந்தனர். எனவே சாம் கரன், தோனி, கேதர் ஜாதவ், ஜடேஜா, பிராவோ ஆகிய பேட்ஸ்மேன்கள் பின்வரிசையில் இருந்தும், எஞ்சிய 7 ஓவரில் 67 ரன்களை அடிக்கமுடியாமல் சிஎஸ்கே தோற்றது.
undefined
தோனி 12 பந்தில் 11 ரன்கள் அடித்து முக்கியமான நேரத்தில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஜடேஜா பெரிய ஷாட்டுகளை ஆடினாலும், ஏற்கனவே கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்த கேதர் ஜாதவ், பெரிய ஷாட்டுகளை அடிக்கமுடியாமல் திணறியதுடன், 12 பந்தில் வெறும் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். அதனால் வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோற்றது சிஎஸ்கே. டெத் ஓவர்களை சுனில் நரைனும் ஆண்ட்ரே ரசலும் இணைந்து அருமையாக வீசினர்.
undefined
டெத் ஓவர்களில் பவுண்டரி கிடைக்காததுதான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதைத்தான் தோனியும் குறிப்பிட்டார்.
undefined
போட்டிக்கு பின்னர் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, எங்கள் பவுலர்கள் அருமையாக வீசிவருகின்றனர். இன்றைக்கும் சிறப்பாக வீசினர். பேட்ஸ்மேன்கள் தான் பவுலர்களின் உழைப்பை வீணடித்துவிட்டோம். ஸ்டிரைக் ரொடேட் செய்வது முக்கியம்தான். ஆனால் கடைசி சில ஓவர்களில் பவுண்டரிகளே கிடைக்கவில்லை. கேகேஆர் பவுலர்கள் தொடர்ச்சியாக ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி பவுண்டரி கொடுக்காமல் கட்டுப்படுத்தினர். அந்த மாதிரி பந்துகளை சமயோசிதமாக சிந்தித்து பவுண்டரி அடிக்க முயல வேண்டும். அதில் நாங்கள் மேம்பட வேண்டும் என்று தோனி தெரிவித்தார்.
undefined
click me!