ஐபிஎல் 2020: பேர்ஸ்டோ - வார்னர் காட்டடி..! பஞ்சாப்புக்கு கடினமான இலக்கு

First Published Oct 8, 2020, 10:08 PM IST

வார்னர் மற்றும் பேர்ஸ்டோவின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 201 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் அணி, 202 ரன்கள் என்ற கடின இலக்கை பஞ்சாப்புக்கு நிர்ணயித்துள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில், தொடர் தோல்விகளை தழுவி கொண்டிருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் ஆடிவருகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
undefined
பேட்டிங்கை தேர்வு செய்ததற்கு வார்னரும் பேர்ஸ்டோவும் ஏற்றவாறு அருமையாக ஆடினர். மிடில் ஆர்டர் அனுபவமில்லாதவர்கள் என்பதாலும், புவனேஷ்வர் குமார் ஆடாததாலும் பொறுப்பை தங்கள் தோள்களில் சுமந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்து பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று பொறுப்புடனும், அதேவேளையில் அடித்தும் ஆடினர்.
undefined
வார்னர், பேர்ஸ்டோ இருவருமே அடித்து ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர். இருவருமே அரைசதம் அடித்தனர். முதல் சில பந்துகளுக்கு பின்னர் தாறுமாறாக அடித்து ஆடிய பேர்ஸ்டோ சதத்தை நெருங்கி கொண்டிருக்கையில், வார்னர் 16வது ஓவரில் பிஷ்னோயின் சுழலில் வீழ்ந்தார்.
undefined
15 ஓவர் வரை பஞ்சாப் அணியால் முதல் விக்கெட்டைக்கூட வீழ்த்த முடியவில்லை. 40 பந்தில் 52 ரன்கள் அடித்து வார்னர் ஆட்டமிழக்க, அதே ஓவரில் 4வது பந்தில் பேர்ஸ்டோ 97 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 55 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் 97 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
undefined
அதன்பின்னர் மனீஷ் பாண்டே ஒரு ரன்னிலும் அப்துல் சமாத் 8 ரன்களிலும் ப்ரியம் கர்க் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழக்க, 160 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த சன்ரைசர்ஸ், 175 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. எனினும் கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மாவும் அடித்து ஆட, ஒருவழியாக 200 ரன்களை கடந்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 201 ரன்களை குவித்து 202 ரன்களை பஞ்சாப்புக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
undefined
click me!