அவன்லாம் ஒரு ஆளுனு அவனையே புடிச்சு ஏன் எல்லா டீமும் தொங்குறாங்கனே தெரியல..! ஆஸி., வீரரை கழுவி ஊற்றிய சேவாக்

First Published Oct 9, 2020, 8:24 PM IST

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடும் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல்லை கடுமையாக விளாசியுள்ளார் சேவாக்.
 

ஐபிஎல்லில் ஒழுங்காவே ஆடாவிட்டாலும், ஒவ்வொரு சீசனிலும் பெரும் கிராக்கியுடன் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போகும் வீரர் ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வெல்.
undefined
பஞ்சாப் அணியில் நீண்டகாலம் ஆடிய அவரை 2018ல் டெல்லி கேபிடள்ஸ் அணி ரூ.9 கோடிக்கு எடுத்தது. அதற்கு முன் நிறைய சீசன்களில் பஞ்சாப்பிற்கு ஏமாற்றளித்துவந்த மேக்ஸ்வெல், 2018 சீசனில் டெல்லி அணியை ஏமாற்றினார். 2019 சீசனில் அவர் ஆடாத நிலையில், நடப்பு சீசனில் அவரை ரூ.10.75 கோடிக்கு எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
undefined
ஆனால் மேக்ஸ்வெல் வழக்கம்போலவே இந்த சீசனிலும் படுமோசமாக சொதப்பிவருகிறார். எந்த பேட்டிங் ஆர்டரில் எந்த சூழலில் இறக்கிவிட்டாலும் சரியாக ஆடுவதில்லை. பஞ்சாப் அணி இதுவரை ஆடிய ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நிலையில், இனிமேல் அந்த அணி, பிளே ஆஃபிற்கு தகுதிபெற வாய்ப்பில்லை.
undefined
தன்னை நம்பி எடுத்த பஞ்சாப் அணிக்கு எந்த விதத்திலும் தனது பங்களிப்பை செய்து நியாயம் செய்யவில்லை மேக்ஸ்வெல். இதுவரை பஞ்சாப் அணி இந்த சீசனில் ஆடிய ஆறு போட்டிகளிலுமே பேட்டிங் ஆடிய மேக்ஸ்வெல், 48 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
undefined
அவரும் ஏதாவது ஒரு போட்டியிலாவது அடித்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவரை பஞ்சாப் அணி தொடர்ந்து ஆடவைத்து, மூக்குடைபட்டே வருகிறது. ஐபிஎல்லுக்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி ஆடிய ஒருநாள் தொடரின் ஒரு போட்டியில் இக்கட்டான நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணியை சதமடித்து வெற்றி பெற வைத்தார் மேக்ஸ்வெல். ஆனால் ஐபிஎல்லில் மட்டும் தொடர்ந்து படுமோசமாக சொதப்பிவருகிறார். ஆனாலும் அவருக்கு ஒவ்வொரு சீசனிலும் படு கிராக்கி இருக்கிறது.
undefined
இந்நிலையில், இதுகுறித்து கிரிக்பஸ் இணையதளத்திடம் பேசிய சேவாக், மேக்ஸ்வெல் எந்த பேட்டிங் ஆர்டரில் இறங்கினாலும் சரியாக ஆடுவதில்லை. சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் முதல் 2 விக்கெட்டுகள் விரைவில் விழுந்ததையடுத்து சீக்கிரமாகவே களத்திற்கு வந்தார். ஆனால் சரியாக ஆடவில்லை. அதற்கு முந்தைய போட்டிகளில் டெத் ஓவர்களில் களத்திற்கு வந்தார். அதிலும் சரியாக ஆடவில்லை. டெத் ஓவர்களில்தான் சரியாக ஆடவில்லையென்றால், சீக்கிரம் களத்திற்கு வந்தாலுமே சொதப்புகிறார்.
undefined
அவரது மனநிலையை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இதையே தான் செய்து கொண்டிருக்கிறார். ஐபிஎல்லில் அதிகமான விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுகிறார். ஆனால் ஒரு சீசனில் கூட சரியாக ஆடுவதில்லை. ஆனாலும் ஐபிஎல் அணிகள் அவருக்கு பின்னாலேயே ஏன் ஓடுகின்றன என்று எனக்கு புரியவில்லை என்று சேவாக் கடுமையாக விளாசியுள்ளார்.
undefined
click me!