ஐபிஎல் 2020: எனக்கு சிஎஸ்கேவில் இருக்க பிடிக்கல..! ஓபனா டுவீட் போட்டு சர்ச்சையை கிளப்பிய வெளிநாட்டு வீரர்

First Published Oct 9, 2020, 6:38 PM IST

சிஎஸ்கே அணி மீதான அதிருப்தியை வெளிநாட்டு வீரர் வெளிப்படையாக டுவீட் செய்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசன் சிஎஸ்கேவிற்கு எந்தவிதத்திலும் சரியாக அமையவில்லை.
undefined
ஐபிஎல்லுக்காக துபாய்க்கு சென்றதும், சிஎஸ்கே வீரர்கள் இருவர் உட்பட அந்த அணியை சேர்ந்த மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதன்பின்னர், சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ரெய்னா இந்த சீசனிலிருந்து விலகி, இந்தியாவிற்கு திரும்பினார். ஹர்பஜன் சிங்கும் விலகினார்.
undefined
ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகிய 2 சீனியர், நட்சத்திர வீரர்கள் இந்த சீசனில் ஆடாதது பெரும் பின்னடைவாக அமைந்த நிலையில், சரியான அணி காம்பினேஷன் அமையாமல் ஹாட்ரிக் தோல்விகளை தழுவியது சிஎஸ்கே.
undefined
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, அதன்பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்விகளை தழுவியது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஷேன் வாட்சன் மற்றும் டுப்ளெசிஸின் சிறப்பான பேட்டிங்கால் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கம்பேக் கொடுத்த சிஎஸ்கே அணி, கேகேஆரிடம் மீண்டும் படுதோல்வியடைந்தது.
undefined
ஐபிஎல்லில் ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற ஒரே அணியான சிஎஸ்கே, 3 முறை கோப்பையையும் வென்றுள்ளது. அப்பேர்ப்பட்ட ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி ஆடுவதை போன்று இல்லை சிஎஸ்கேவின் ஆட்டம்.
undefined
அணி தேர்வு, காம்பினேஷன் ஆகியவை விமர்சனத்துக்குள்ளாகிவரும் நிலையில், சிஎஸ்கேவிற்கு இந்த சீசன் எந்தவிதத்திலும் நன்றாக அமையவில்லை.
undefined
இந்நிலையில், சிஎஸ்கே அணி வீரரான தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் லுங்கி இங்கிடி, சிஎஸ்கே அணி மீதான அதிருப்தியை வெளிப்படையாக டுவீட் செய்திருப்பது கடும் சர்ச்சையையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
undefined
சிஎஸ்கே அணி குறித்த ஒரு டுவீட்டில், சிஎஸ்கேவின் பெயரை குறிப்பிடாமல், அவர்கள் எனக்கு தீங்கு நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று பதிவிட்டிருந்தார். மற்றொரு டுவீட்டில், நமக்கு எல்லாமே குடும்பம்தானே.. பிறகு குடும்பத்தை பற்றி எப்படி பேசாமல் இருக்க முடியும் என்று பதிவிட்டுள்ளார்.
undefined
இங்கிடியின் பதிவிற்கு, நிறைய ரசிகர்கள், உங்களுக்கு சிஎஸ்கே சரியாக வாய்ப்பு வழங்குவதில்லை. நீங்கள் வேறு அணிக்கு ஆட தகுதியானவர் என்று கமெண்ட்டுகளை போட, அவற்றை லைக் செய்திருக்கிறார் இங்கிடி. எனவே அவர் சிஎஸ்கேவைத்தான் சாடியிருக்கிறார் என்பது தெரிகிறது.
undefined
இங்கிடியை 2018ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே. அந்த சீசனில் சிஎஸ்கே கோப்பையை வென்றது. கடந்த சீசனில் காயம் காரணமாக அவர் ஆடவில்லை. இந்த சீசனில் முதல் 2 போட்டிகளில் மட்டுமே ஆடினார். அதில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 30 ரன்களை வாரி வழங்கியதையடுத்து, அதன்பின்னர் அவர் சிஎஸ்கே அணியில் எடுக்கப்படவில்லை.
undefined
click me!