ஐபிஎல்லில் வரலாற்று சாதனை படைத்த வார்னர்..! எங்கப்பா இந்த கோலி, ரோஹித், ரெய்னா, ஏபிடிலாம்..?

First Published Oct 9, 2020, 1:33 PM IST

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக அரைசதம் அடித்த டேவிட் வார்னர், ஐபிஎல்லில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த சீசனில் ஏற்ற இறக்கத்துடன் ஆடிவருகிறது. இதுவரை ஆடிய ஆறு போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது.
undefined
மிட்செல் மார்ஷ், புவனேஷ்வர் குமார் ஆகிய, சன்ரைசர்ஸ் அணி நம்பியிருந்த நட்சத்திர வீரர்கள் காயத்தால் இந்த சீசனிலிருந்து விலகியபோதும், கொஞ்சம் கூட தளராமல் சிறப்பாக ஆடிவருகிறது சன்ரைசர்ஸ் அணி.
undefined
சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமானவர்களில் முதன்மையானவர் அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர். 2014ம் ஆண்டிலிருந்து சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிவரும் வார்னர், அந்த அணிக்காக 7வது சீசனில் ஆடிவருகிறார். ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்களில் ஒருவர் டேவிட் வார்னர்.
undefined
ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரோஹித் சர்மாவுக்கு அடுத்து 4ம் இடத்தில் இருக்கிறார் வார்னர். கோலி, ரெய்னா, ரோஹித் சர்மா, டிவில்லியர்ஸ் ஆகியோர் ஐபிஎல்லின் முதல் சீசனிலிருந்தே ஆடிவருகின்றனர்.
undefined
ஆனால் வார்னர் 2009ல் தான் ஐபிஎல்லில் அடியெடுத்து வைத்தார். 2009லிருந்து 2013 வரை டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடிய வார்னர் 2014லிருந்து சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிவரும் நிலையில் 2016ல் சன்ரைசர்ஸுக்கு கோப்பையையும் வென்று கொடுத்தார்.
undefined
இப்போதும் சன்ரைசர்ஸின் மேட்ச் வின்னராகவும் கேப்டனாகவும் திகழ்ந்துவரும் வார்னர், ஐபிஎல்லில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்த சீசனில் இதுவரை 2 அரைசதங்கள் அடித்துள்ளார் வார்னர். பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய போட்டியில் 52 ரன்கள் அடித்தார். இந்த அரைசதம் ஐபிஎல்லில் வார்னரின் 50வது அரைசதம். இதன்மூலம் ஐபிஎல்லில் அரைசதத்தில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்துள்ளார்.
undefined
ரோஹித் சர்மா, விராட் கோலி, ரெய்னா, டிவில்லியர்ஸ், கெய்ல் என ஐபிஎல்லில் கோலோச்சும் இவர்களையே ஓரங்கட்டி, முதல் வீரராக அரைசதத்தில் அரைசதம் அடித்துள்ளார் வார்னர். வார்னருக்கு அடுத்த இடத்தில் 42 அரைசதங்களுடன் விராட் கோலி இருக்கிறார். ரெய்னா மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரும் தலா 39 அரைசதங்களையும், ரோஹித் சர்மா 38 அரைசதங்களையும் ஐபிஎல்லில் அடித்துள்ளனர்.
undefined
click me!