RR vs DC: வெளிநாட்டு வீரரை மாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.. டெல்லி கேபிடள்ஸ் முதலில் பேட்டிங்

First Published Oct 9, 2020, 7:29 PM IST

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன.
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணி இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள நிலையில், முதல் 2 போட்டிகளில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அடுத்த 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்ற நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் ராஜஸ்தான் இறங்கியுள்ளது.
undefined
சிறிய மைதானமான ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில், இரு அணிகளிலுமே பவர் ஹிட்டர்கள் இருப்பதால் கண்டிப்பாக பெரிய ஸ்கோர் மேட்ச்சாகவே அமையும். இதற்கு முன் இந்த மைதானத்தில் நடந்த 2 போட்டிகளிலும் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பவுலிங்கை தேர்வு செய்தார்.
undefined
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டாம் கரன் நீக்கப்பட்டு ஆண்ட்ரூ டையும், ராஜ்பூத் நீக்கப்பட்டு வருண் ஆரோனும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
undefined
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), மஹிபால் லோம்ரார், ராகுல் டெவாட்டியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆண்ட்ரூ டை, ஷ்ரேயாஸ் கோபால், வருண் ஆரோன், கார்த்திக் தியாகி.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணி:பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா.
undefined
click me!