ஐபிஎல் 2020: பஞ்சாப் பாய்ஸ், உங்க தோல்விக்கு நீங்க செஞ்ச 2 தப்புதான் காரணம்..! சச்சின் டெண்டுல்கர் அதிரடி

First Published Sep 28, 2020, 5:42 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 223 ரன்கள் அடித்தும், பஞ்சாப் அணி தோற்றதற்கான காரணத்தை மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசனில் மட்டுமல்லாது, ஐபிஎல் வரலாற்றிலேயே மிகச்சிறந்த போட்டியாக, ஷார்ஜாவில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸூக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கும் இடையே நடந்த போட்டி அமைந்தது.
undefined
இந்த போட்டியில் மயன்க் அகர்வாலின் சதம்(106 ரன்கள்) மற்றும் ராகுலின் அரைசதம்(69 ரன்கள்) ஆகியவற்றாலும், நிகோலஸ் பூரானின் டெத் ஓவர் அதிரடியாலும் 20 ஓவரில் 223 ரன்களை குவித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
undefined
ஆனால் ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், ராகுல் டெவாட்டியா ஆகிய மூவரின் அதிரடி அரைசதத்தால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 224 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை வெற்றிகரமாக விரட்டி, ஐபிஎல்லில் அதிகபட்ச இலக்கை விரட்டிய அணி என்ற வரலாற்று சாதனை வெற்றியை பெற்றது.
undefined
இந்த போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் பட்லர் 4 ரன்களில் ஆட்டமிழந்திருந்தாலும், அதன்பின்னர் ஸ்மித்தும் சஞ்சு சாம்சனும் இணைந்து அதிரடியாக ஆடியதன் விளைவாக 9 ஓவருக்கே 100 ரன்களை எட்டிவிட்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
undefined
அதன்பின்னர் ஸ்மித் அவுட்டானதும் களத்திற்கு வந்த ராகுல் டெவாட்டியா படுமோசமாக திணறினார். ஒருமுனையில் சஞ்சு சாம்சன் அடித்து ஆடி அரைசதம் அடிக்க, மறுமுனையில் ராகுல் டெவாட்டியா அதிகமான பந்துகளை வீணடித்தார். அதனால் சாம்சனின் மீதான அழுத்தம் அதிகரித்தது. சிக்ஸர்களாக அடிக்க முயன்ற சஞ்சு சாம்சன், ஷமியின் பந்தில் 85 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டம் கிட்டத்தட்ட பஞ்சாப் பக்கம் சாய்ந்தது.
undefined
ஆனால், தான் எதிர்கொண்ட முதல் 20 பந்தில் ஸ்பின் பவுலிங்கை சரியாக ஆடமுடியாமல் திணறிய டெவாட்டியா, யாருமே எதிர்பார்த்திராத விதமாக ஷெல்டான் கோட்ரெல் வீசிய 18 ஓவரில் ஐந்து சிக்ஸர்களை விளாசி ராஜஸ்தான் ராயல்ஸின் வெற்றியை உறுதி செய்தார். அதன்பின்னர் ஷமி வீசிய 19வது ஓவரிலும் ஆர்ச்சர் 2 சிக்ஸர்களையும், டெவாட்டிய ஒரு சிக்ஸரையும் விளாச, கடைசி ஓவரில் 2 ரன்னை எளிதாக அடித்து ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
undefined
இந்த போட்டியில், பஞ்சாப் அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள் டெத் ஓவர்களில் யார்க்கர் வீசாததையும் ராகுல் டெவாட்டியா களத்தில் நின்ற நிலையில், ஸ்பின்னுக்கு திணறிய அவருக்கு, முருகன் அஷ்வினின் ஓவர் கோட்டா மீதமிருந்தும், அவரை வீசவைக்காததையும் சுட்டிக்காட்டியுள்ள சச்சின் டெண்டுல்கர்.
undefined
இதுகுறித்து டுவீட் செய்துள்ள சச்சின் டெண்டுல்கர், ஸ்மித், சஞ்சு சாம்சன், டெவாட்டியா டெரிஃபிக் பேட்டிங். நிதானமாக இருந்து கடைசியில் அடித்து நொறுக்கி அசத்திவிட்டனர். பஞ்சாப் அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள் நிறைய யார்க்கர்களை வீசாதது வியப்பாக இருக்கிறது. அதேபோல முருகன் அஷ்வினை போதுமான அளவிற்கு பயன்படுத்த தவறிவிட்டது பஞ்சாப் அணி என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
undefined
முருகன் அஷ்வின் கடைசி ஓவரில் 3 பந்து வீசினார். அதற்கு முன் ஒரேயொரு ஓவர் மட்டுமே வீசினார். ஸ்பின் பவுலிங்கை திறம்பட ஆடமுடியாமல் திணறிக்கொண்டிருந்த ராகுல் டெவாட்டியா, ஃபாஸ்ட் பவுலிங்கில் அடித்து நொறுக்கினார். ஸ்பின்னுக்கு அவர் திணறுகிறார் எனும்போது, முருகன் அஷ்வினுக்கு கூடுதல் ஓவர்கள் கொடுத்திருக்கலாம்.
undefined
click me!