ஐபிஎல் 2020: என்னது இன்னக்கி மேட்ச்ல அவரு ஆடலையா..? ஆர்சிபி அணியில் வெளிநாட்டு வீரர் அதிரடி மாற்றம்

First Published | Sep 28, 2020, 4:28 PM IST

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக இன்றைய போட்டியில் ஆடும் ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனிலும் வழக்கம்போலவே கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு, தொடக்கமே மரண அடியாக விழுந்துள்ளது.
சன்ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி ஆடிய முதல் போட்டியில், ஆர்சிபி தட்டுத்தடுமாற்றி வெற்றி பெற்ற நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
Tap to resize

ஆர்சிபி அணி இந்த சீசனில் நல்ல பேலன்ஸ் கொண்ட சிறந்த அணியாக இருக்கிறது என்று அந்த அணியின் கேப்டன் விராட் கோலி, இந்த சீசன் தொடங்குவதற்கு முன் தெரிவித்திருந்தார். ஆனாலும் அந்த அணியின் டெத் பவுலிங் இன்னும் மோசமாகவே உள்ளது.
டேல் ஸ்டெய்ன், உமேஷ் யாதவ் ஆகியோர் ரன்களை வாரி வழங்குகின்றனர். நவ்தீப் சைனி மட்டுமே நம்பிக்கையளிக்கிறார். கடந்த போட்டியில் பஞ்சாப்பிடம் மரண அடி வாங்கிய ஆர்சிபி அணி, இன்று மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது. சிறந்த ஃபினிஷர்களை கொண்ட மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நல்ல ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டுடன் ஆர்சிபி இறங்க வேண்டும்.
எனவே அந்த அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. டேல் ஸ்டெய்ன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இலங்கையை சேர்ந்த இடது கை ஃபாஸ்ட் பவுலர் இசுரு உடானா இன்றைய போட்டிக்கான ஆர்சிபி அணியில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த ஒரு மாற்றம் மட்டுமே ஆர்சிபி அணியில் செய்யப்பட வாய்ப்புள்ளது.
உமேஷ் யாதவ், மும்பைக்கு எதிராக இதற்கு முன் ஓரளவிற்கு நன்றாகவே வீசியுள்ளார். அவர் நல்ல வேகமாக வீசக்கூடிய பவுலர். லைன்&லெந்த்தில் மட்டும் கவனம் செலுத்தினால் மிரட்டிவிடுவார். அதனால் அவருக்கு இன்றைய போட்டியிலும் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்:தேவ்தத் படிக்கல், ஆரோன் ஃபின்ச், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ், ஜோஷுவா ஃபிலிப்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், இசுரு உடானா, நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.

Latest Videos

click me!