ஐபிஎல் 2020: கேகேஆர் அணியின் கேப்டனை மாத்துங்க..! அவரை கேப்டனாக்குங்க.. முன்னாள் ஜாம்பவான் அதிரடி

First Published Sep 28, 2020, 3:26 PM IST

கேகேஆர் அணியின் கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில்லை நியமிக்க வேண்டும் என முன்னாள் ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
 

2017 ஐபிஎல் சீசனுடன் கம்பீர் கேகேஆர் அணியிலிருந்து விலகிய பிறகு, 2018லிருந்து கேகேஆர் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் இருந்துவருகிறார். தினேஷ் கார்த்திக் கேப்டன்சியில் 2018ல் பிளே ஆஃபிற்கு சென்ற கேகேஆர் அணி, கடந்த சீசனில் ஆறாம் இடத்தை பிடித்தது.
undefined
இந்த சீசனிலும் தினேஷ் கார்த்திக் தலைமையில் தான் கேகேஆர் அணி களமிறங்கியுள்ளது. அந்த அணியில் இந்த சீசனில், உலக கோப்பை வின்னிங் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் இருக்கிறார். ஆனாலும் தினேஷ் கார்த்திக் தான் கேப்டனாக இருக்கிறார்.
undefined
மும்பை இந்தியன்ஸூக்கு எதிரான முதல் போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த கேகேஆர் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் கேகேஆர் அணியின் இளம் தொடக்க வீரர் ஷுப்மன் கில், எந்த சூழலிலும் அவசரமோ பதற்றமோ படாமல் அரைசதம் அடித்ததுடன், கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
undefined
அவரது நிதானமான, தெளிவான மற்றும் முதிர்ச்சியான பேட்டிங் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரையும் கவர்ந்தது. அருமையாக ஆடி 62 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 70 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் கில்.
undefined
அவரது நிதானம், தெளிவு, முதிர்ச்சி ஆகியவற்றை பார்த்து வியந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், ஷுப்மன் கில்லை கேகேஆர் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
undefined
ஷுப்மன் கில் ஐபிஎல்லில் 29 போட்டிகளில் ஆடி 35.18 என்ற சராசரியுடன் 563 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!