ஐபிஎல் 2020: ஆர்சிபிலாம் அசால்ட்டுங்க.. எங்களுக்கு அதுக்கான அவசியமே இல்ல..! மும்பை இந்தியன்ஸின் அதிரடி முடிவு

First Published Sep 28, 2020, 4:50 PM IST

ஆர்சிபி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. துபாயில் நடக்கும் இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் மோதுகின்றன.
undefined
மும்பை இந்தியன்ஸ் அணி, சிஎஸ்கேவிடம் முதல் போட்டியில் தோற்றாலும், கேகேஆருக்கு எதிரான 2வது போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் அருமையாக ஆடி 49 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா ஃபார்மிற்கு வந்திருப்பது அந்த அணியின் பெரிய பலம்.
undefined
ஆர்சிபி அணி, முதல் போட்டியில் சன்ரைசர்ஸை தட்டுத்தடுமாறி 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தாலும், பஞ்சாப்புக்கு எதிரான அடுத்த போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. எனவே மீண்டும் வெற்றி பெற்று கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ள ஆர்சிபி அணி, இன்றைய போட்டியில் வலுவான மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது.
undefined
இதுவரை இரு அணிகளும் மோதிய போட்டிகளில் 16 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸும் 9 போட்டிகளில் ஆர்சிபியும் வெற்றி பெற்றுள்ளன. ஆர்சிபி அணியின் மீது எல்லா காலக்கட்டத்திலும் மும்பை இந்தியன்ஸ் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. எனவே ஆர்சிபிக்கு கண்டிப்பாக இது பெரும் சவாலான போட்டியாக இருக்கும்.
undefined
அவர்கள் அடிப்பதற்கு ஏற்றாற்போலவே ஷார்ட் பிட்ச் பந்துகளை வாரி வழங்கினர் கேகேஆர் பவுலர்கள். அதனால் 195 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 196 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆடிய கேகேஆர் வீரர்களில் ஒருவர் கூட சரியாக ஆடவில்லை. அதிகபட்சமாக கம்மின்ஸ் தான் 33 ரன்கள் அடித்தார். தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் அடித்தார். மோர்கன், ரசல் எல்லாம் பதின்களில் ஆட்டமிழந்தனர்.
undefined
மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்:ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ட்ரெண்ட் போல்ட், பாட்டின்சன், ராகுல் சாஹர், பும்ரா.
undefined
click me!