RCB vs KKR: ஆர்சிபிக்கு இது ஒண்ணுதான் பிரச்னை..! ஆனாலும் கோலி பழைய தவறை இப்போலாம் செய்றதே இல்ல

First Published Oct 12, 2020, 5:10 PM IST

கேகேஆருக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் பாதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய ஆர்சிபி அணி, இந்த சீசனில் நன்றாக ஆடிவருகிறது.
undefined
இதுவரை ஆடிய ஆறு போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காமிடத்தில் இருக்கும் ஆர்சிபி அணி, கேகேஆருடன் இன்று மோதுகிறது. இந்த போட்டி சிறிய மைதானமான ஷார்ஜாவில் நடக்கிறது. இரு அணிகளிலுமே சம அளவில் பவர் ஹிட்டர்கள் இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.
undefined
ஆர்சிபி அணி இதற்கு முந்தைய சீசன்களில் இருந்ததைப்போல, போட்டிக்கு போட்டி ஆடும் லெவன் காம்பினேஷனை மாற்றுவதில்லை. ஆர்சிபி அணி காம்பினேஷனை மாற்றிக்கொண்டே இருந்ததும், கடந்த காலங்களில் அந்த அணியில் தோல்விகளுக்கு முக்கிய காரணம். இந்த முறை பேட்டிங், பவுலிங், ஆல்ரவுண்டர் என அனைத்துவிதத்திலும் நல்ல பேலன்ஸான அணியாக உள்ளதால், மாற்றங்களை தேவையில்லாமல் செய்வதில்லை.
undefined
அதிலும் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், அணியில் இணைந்ததற்கு பிறகு அணி காம்பினேஷன் மிகச்சிறப்பாக உள்ளது. எனவே சிஎஸ்கேவிற்கு எதிராக களமிறங்கிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ஆர்சிபி களமிறங்கும்.
undefined
ஆர்சிபி அணியில் தேவ்தத் படிக்கல், கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் நல்ல ஃபார்மில் ஆடும் நிலையில், ஃபின்ச் மட்டும் சற்று திணறிவருகிறார். இதுவரை ஆடிய ஆறு போட்டிகளில், ஒரேயொரு அரைசதத்துடன் 124 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இன்றைய போட்டி ஷார்ஜாவில் நடப்பதால், சிறிய மைதானமான ஷார்ஜாவை பயன்படுத்தி பெரிய ஷாட்டுகளுடன் பெரிய இன்னிங்ஸை ஆடவேண்டிய நிலையில் இருக்கிறார் ஃபின்ச்.
undefined
ஆர்சிபி உத்தேச ஆடும் லெவன்:ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), குர்கீரத் சிங் மன், வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், ஷிவம் துபே, இசுரு உடானா, நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல்.
undefined
click me!