ஐபிஎல் 2020: 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சுனில் நரைன்..! கேகேஆர் அணி அதிர்ச்சி

First Published Oct 12, 2020, 3:47 PM IST

சுனில் நரைனின் பவுலிங் ஆக்‌ஷன் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிலையில், அதுகுறித்து கேகேஆர் அணி நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 

ஐபிஎல்லில் 2012லிருந்து கேகேஆர் அணியில் ஆடிவரும் சுனில் நரைன், அந்த அணி, 2012 மற்றும் 2014 ஆகிய 2 சீசன்களிலும் கோப்பையை வெல்லும்போது, முக்கிய பங்கு வகித்தார்.
undefined
பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அணிக்கு தேவைப்படும்போது, தனது சிறந்த பங்களிப்பை வழங்கி, கடந்த பல ஆண்டுகளாக கேகேஆர் அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்துவருகிறார்.
undefined
இந்த சீசனில் கேகேஆர் அணிக்காக இதுவரை பேட்டிங்கில் பெரிதாக சோபிக்காத நரைன், பவுலிங்கில் மிடில் மற்றும் டெத் ஓவர்களில் அருமையாக வீசி, சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
undefined
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், கிட்டத்தட்ட தோல்வியை நெருங்கிவிட்ட கேகேஆர் அணியை, இழுத்துப்பிடித்து 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார் சுனில் நரைன். பஞ்சாப் அணி பேட்டிங்கின்போது 18வது ஓவரை வீசிய நரைன், அந்த ஓவரில் வெறும் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து பூரானை வீழ்த்தினார். கடைசி ஓவரில் பஞ்சாப்பின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற செய்தார். அந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
undefined
அந்த போட்டியில் அவரது பவுலிங் ஆக்‌ஷன், ஐசிசி விதிமுறையை மீறி இருப்பதாக சந்தேகித்த அம்பயர்கள், அதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இதையடுத்து எச்சரிக்கை பட்டியலில் வைக்கப்பட்டுள்ள சுனில் நரைன், மீண்டும் சந்தேகத்திற்குள்ளான வகையில் பந்துவீசினால் அவர் பந்துவீச தடை விதிக்கப்படும் அபாயத்தில் உள்ளார்.
undefined
சுனில் நரைன் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி, ஐபிஎல்லிலும் சரி இதே சர்ச்சையில் சிக்கி, பின்னர் அவரது பவுலிங் ஆக்‌ஷன் சரியானதுதான் என நிரூபித்து அதிலிருந்து மீண்டெழுந்து வந்தவர். தற்போது மீண்டும் அதே சர்ச்சை எழுந்துள்ளது.
undefined
சுனில் நரைன் பவுலிங் ஆக்‌ஷன் மீதான புகார் மிகுந்த சர்ப்ரைஸாக இருப்பதாக கேகேஆர் அணி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேகேஆர் அணி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சுனில் நரைன் மீதான புகார் அதிர்ச்சியளிக்கிறது. 2012லிருந்து 115 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளார். 2015ல் அவரது பவுலிங் ஆக்‌ஷன் குறித்த சர்ச்சை எழுந்தது. அவரது பவுலிங் ஆக்‌ஷன் பரிசோதிக்கப்பட்டு, சரியானது என்று நிரூபிணமாகி,அதிலிருந்து மீண்டு அதன்பின்னர் 68 ஐபிஎல் போட்டிகளில் அவர் ஆடியுள்ளார். இந்த சீசனில் முதல் ஐந்து போட்டிகளில் அவரது பவுலிங் ஆக்‌ஷன் குறித்து எந்த சர்ச்சையும் எழவில்லை.
undefined
திடீரென அவரது பவுலிங் ஆக்‌ஷன் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இந்த விவகாரத்தில் விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்று கேகேஆர் அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
undefined
click me!