MI vs DC: சீனியர் வீரருக்கு சான்ஸ் கொடுத்த டெல்லி அணி.. சற்றும் எதிர்பார்த்திராத திடீர் அதிரடி முடிவு

First Published Oct 11, 2020, 7:39 PM IST

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் நடக்கிறது. சமபலத்துடனும் இந்த சீசனில் மிகச்சிறப்பாக ஆடி புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் இரு அணிகள் மோதுவதால் போட்டி கடுமையாக இருக்கும்.
undefined
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், பேட்டிங்கை தேர்வு செய்தார்.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடமுடியாமல் போனதால், விக்கெட் கீப்பர் தேவை என்பதால், அலெக்ஸ் கேரி எடுக்கப்பட்டிருக்கிறார். 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஆடமுடியும் என்பதால், அலெக்ஸ் கேரி அணியில் சேர்க்கப்பட்டதால், ஹெட்மயர் நீக்கப்பட்டுள்ளார்.
undefined
சீனியர் வீரரான ரஹானே, இந்த சீசனில் முதல் முறையாக இந்த போட்டியில் ஆட வாய்ப்பு பெற்றுள்ளார்.
undefined
டெல்லி கேபிடள்ஸ்:பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரஹானே, அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா.
undefined
மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது.
undefined
மும்பை இந்தியன்ஸ்:ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட், ஜேம்ஸ் பாட்டின்சன், ஜஸ்ப்ரித் பும்ரா
undefined
click me!