நீ யாரா இருந்தா எனக்கென்ன..? கோலி, ஏபிடி, வார்னரைலாம் பார்த்து திருந்து.. ராயுடுவை பிரித்து மேய்ந்த பீட்டர்சன்

First Published Oct 11, 2020, 5:53 PM IST

ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே 37 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில், அம்பாதி ராயுடுவை கடுமையாக விமர்சித்துள்ளார் கெவின் பீட்டர்சன்.
 

ஐபிஎல் 13வது சீசனில் சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய 7 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளுடன் படுமோசமான நிலையில் உள்ளது. ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற அணி என்ற பெருமைக்கும் சாதனைக்கும் சொந்தக்கார அணியான சிஎஸ்கே, இந்த சீசனில் பிளே ஆஃபிற்கு தகுதிபெறுவதே பெரும் சந்தேகமாகியுள்ளது.
undefined
ஹாட்ரிக் தோல்விகளிலிருந்து மீண்டு, பஞ்சாப்புக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, கேகேஆர் மற்றும் ஆர்சிபி ஆகிய 2 அணிகளுக்கு எதிராகவும் வெற்றி பெற வாய்ப்பிருந்தும் நழுவவிட்டது.
undefined
சிஎஸ்கே அணி பேட்டிங்கில் பெரிதும் நம்பியிருக்கும் அம்பாதி ராயுடுவை, ஆர்சிபிக்கு எதிரான தோல்விக்கு பிறகு கெவின் பீட்டர்சன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
undefined
170 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி, தொடக்கத்திலேயே அந்த அணியின் நட்சத்திர வீரர்களான வாட்சன் மற்றும் டுப்ளெசிஸின் விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
undefined
அதன்பின்னர் ராயுடுவும் தமிழகத்தை சேர்ந்த ஜெகதீசனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். விக்கெட்டை இழக்காமல் இவர்கள் ஆடினாலும், தொடர்ச்சியாக சிங்கிள் ரொடேட் செய்து மற்றும் வேகமாக ஓடி ஒரு ரன்னை 2ஆக மாற்றாமல் அதிகமான பந்துகளை வீணடித்ததால், கடைசி நேரத்தில் நெருக்கடி அதிகமானது. குறிப்பாக அம்பாதி ராயுடு படுமந்தமாக ரன் ஓடினார்.
undefined
அதை சுட்டிக்காட்டி, ராயுடுவை கடுமையாக விமர்சித்துள்ளார் பீட்டர்சன். ராயுடு குறித்து பேசிய கெவின் பீட்டர்சன், அம்பாதி ராயுடு விழித்துக்கொள்ள வேண்டும். உலகின் சிறந்த வீரர்கள் பேட்டிங் ஆடும்போது எப்படி ரன் ஓடுகிறார்கள் என்று பாருங்கள். 170 மாதிரியான டார்கெட்டை விரட்டும்போது வேகமாக ரன் ஓட வேண்டும். நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்துட்டு போங்க.. ஆனால் வேகமாக ரன் ஓட வேண்டும். எப்படி ஓடுவது என்று கோலி, டிவில்லியர்ஸ், டுப்ளெசிஸ், வார்னர், பேர்ஸ்டோவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என்று ராயுடுவை விளாசியுள்ளார்.
undefined
ராயுடு ஆர்சிபிக்கு எதிராக 40 பந்தில் 42 ரன்கள் அடித்தார். மிடில் ஓவர்களில் பெரிய ஷாட் ஆடாத அதேவேளையில் வேகமாக ரன்னும் ஓடாததால் ஸ்கோர் ஆமை வேகத்தில் உயர்ந்தது. அதைத்தான் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார் பீட்டர்சன்.
undefined
விராட் கோலி ரன் ஓடுவதில் வல்லவர் என்பது தெரிந்த விஷயம் தான். சிஎஸ்கேவிற்கு எதிரான நேற்றைய போட்டியில் 90 ரன்கள் அடித்தார் விராட் கோலி. அதில் 40 ரன்கள் மட்டுமே பவுண்டரிகளின் மூலம் கிடைத்தவை. மீதம் ஐம்பது ரன்கள் ஓடியே எடுக்கப்பட்டவை. 28 சிங்கிள் மற்றும் 11 டபுள்ஸ் ஓடினார் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ரன்னை எல்லாம் 2ஆக மாற்றுவதில் வல்லவரான கோலி, அதை சிஎஸ்கேவிற்கு எதிராக தொடர்ந்து செய்ததால் தான் ஆர்சிபி அணி 169 ரன்கள் என்ற ஸ்கோரையே அடித்தது.
undefined
click me!