SRH vs RR: ஜெயிச்சே தீரணும்.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தாறுமாறான மாற்றங்கள்..! சன்ரைசர்ஸ் பேட்டிங்

First Published Oct 11, 2020, 3:35 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர், பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று வெற்றிகரமாக தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதன்பின்னர் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது.
undefined
எனவே இந்த சீசனில் கம்பேக் வெற்றியை எதிர்நோக்கியிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன்ரைசர்ஸை எதிர்கொள்கிறது. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர், வழக்கம்போலவே பேட்டிங்கை தேர்வு செய்தார்.
undefined
இந்த போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்துல் சமாத் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.
undefined
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், ப்ரியம் கர்க், அபிஷேக் ஷர்மா, ரஷீத் கான், சந்தீப் ஷர்மா, கலீல் அகமது, டி.நடராஜன்.
undefined
வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட்டின் மிகப்பெரிய மேட்ச் வின்னராக திகழ்ந்துவரும், சமகால கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக திகழும் பென் ஸ்டோக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடைய குவாரண்டின் நேற்றுதான் முடிந்தது.
undefined
அவர் பயிற்சி கூட செய்யவில்லை. ஆனாலும் அவர் மீது நம்பிக்கை வைத்து, மிகப்பெரிய மேட்ச் வின்னர் என்பதால், பேட்டிங் மற்றும் பவுலிங் என எல்லாவிதத்திலும் சிறந்த பங்களிப்பை செய்யக்கூடிய பென் ஸ்டோக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதனால் ஆண்ட்ரூ டை நீக்கப்பட்டுள்ளார்.
undefined
அதேபோல யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு ராபின் உத்தப்பாவும், மஹிபால் லோம்ரார் நீக்கப்பட்டு ரியான் பராக்கும், வருண் ஆரோன் நீக்கப்பட்டு ஜெய்தேவ் உனாத்கத்தும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
undefined
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), ராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, ஷ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், கார்த்திக் தியாகி, ஜெய்தேவ் உனாத்கத்.
undefined
click me!