RCB vs KKR: என்னது இன்னக்கி மேட்ச்ல அவரு ஆடலையா? கேகேஆருக்கு மரண அடி.. இங்கிலாந்து அதிரடி மன்னனுக்கு வாய்ப்பு

First Published Oct 12, 2020, 4:40 PM IST

ஆர்சிபிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இதுவரை தலா 6 போட்டிகளில் ஆடி தலா 4 வெற்றிகளுடன், புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4வது இடங்களில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் இன்று மோதுகின்றன.
undefined
சிறிய மைதானமான ஷார்ஜாவில் இந்த போட்டி நடக்கிறது. கோலி, ஃபின்ச், டிவில்லியர்ஸ், மோர்கன், ஷுப்மன் கில், நிதிஷ் ராணா என இரு அணிகளிலுமே பவர் ஹிட்டர்கள் இருப்பதால், சிக்ஸர் மழை பொழியும் என்பதிலும் போட்டி கடுமையாக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.
undefined
ஆனால் இன்றைய போட்டியில் கேகேஆரின் பவர் ஹிட்டரும் மேட்ச் வின்னர்களில் ஒருவருமான ஆண்ட்ரே ரசல் இன்றைய போட்டியில் ஆடுவது சந்தேகம். பஞ்சாப்புக்கு எதிரான கடந்த போட்டியில் ஃபீல்டிங் செய்யும்போது, பவுண்டரி லைனில் விளம்பர பலகையில் மோதி அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது. எனவே அந்த போட்டியில் அதன்பின்னர் அவர் ஃபீல்டிங் செய்யவில்லை. அதனால் இன்றைய போட்டியிலும் அவர் ஆடுவது சந்தேகமே.
undefined
இந்த சீசனில் இதுவரை பெரியளவில் பேட்டிங் ஆடிராத ஆண்ட்ரே ரசலுக்கு, சிறிய மைதானமான ஷார்ஜா செம சான்ஸாக இருந்திருக்கும். ஆனால் காயம் காரணமாக இன்று அவர் ஆடமுடியாத சூழல் உருவாகியுள்ளது.
undefined
அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டாம் பாண்ட்டன் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் டாப் ஆர்டர் அதிரடி பேட்ஸ்மேனான டாம் பாண்ட்டனை ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கேகேஆர் அணி. மோர்கன், ரசல், நரைன், பாட் கம்மின்ஸ் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் கேகேஆர் அணியில் ஆடியதால், பாண்ட்டனுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில், ரசல் ஆடாததால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். இதைத்தவிர ஆடும் லெவனில் வேறு மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை.
undefined
கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவன்:ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயன் மோர்கன், தினேஷ் கார்த்திக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), டாம் பாண்ட்டன், பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், நாகர்கோட்டி, பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.
undefined
click me!