SRH vs RR: இப்போ எங்களோட வந்து மோதி பாருங்கடா.. டபுள் பவருடன் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்..! இதுதான் காரணம்

First Published Oct 11, 2020, 1:35 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று வெற்றியுடன் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அடுத்த 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியடைந்து, வெறும் 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது.
undefined
எனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒரு வெற்றி அவசியம் தேவைப்படுகிறது. இந்நிலையில், துபாயில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
undefined
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பவுலிங் யூனிட், ஆர்ச்சர், ராகுல் டெவாட்டியா, ஷ்ரேயாஸ் கோபால் என சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றுள்ளது. ஆனால் பேட்டிங்கில் அதிகமாக டாப் ஆர்டரையே சார்ந்திருக்கிறது.
undefined
பட்லர், சாம்சன், ஸ்மித் ஆகிய மூவரையே அதிகமாக சார்ந்திருக்கிறது. இவர்கள் சோபிக்கவில்லையென்றால், ராஜஸ்தானின் தோல்வி உறுதியாகிவிடுகிறது.
undefined
எனவே ஒரு ஃபினிஷராகவும், பவுலராகவும், மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் அணியில் இணையும் தருணத்திற்காக காத்திருந்தது ராஜஸ்தான் அணி. இந்நிலையில், கடந்த வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் வந்த பென் ஸ்டோக்ஸ், நேற்றுடன் குவாரண்டினை முடித்துவிட்டதால், பயிற்சியில் ஈடுபடவில்லை என்றாலும் பரவாயில்லை என்று, முக்கியமான இன்றைய போட்டியில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
கடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியில் நான்காவது வெளிநாட்டு வீரராக ஆடிய ஆண்ட்ரூ டை நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்படுவார். பட்லர், ஸ்மித், ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் ஆகிய 4 சிறந்த வெளிநாட்டு வீரர்கள் காம்பினேஷனுடன் இன்று களமிறங்கும் ராஜஸ்தான் அணி. இந்த ஒரு மாற்றத்தைத்தவிர வேறு எந்த மாற்றமும் ராஜஸ்தான் அணியில் செய்யப்படமாட்டாது.
undefined
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்:ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), மஹிபால் லோம்ரார், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ராகுல் டெவாட்டியா, ஷ்ரேயாஸ் கோபால், கார்த்திக் தியாகி, வருண் ஆரோன்ஜெய்தேவ் உனாத்கத்.
undefined
click me!