CSK vs RCB: சிஎஸ்கே ரசிகர்களுக்கு செம குட் நியூஸ்.. எதிர்பார்த்த மாற்றத்தை செய்த தல தோனி..! ஆர்சிபி பேட்டிங்

First Published Oct 10, 2020, 7:33 PM IST

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் இதுவரை சிஎஸ்கேவிற்கு நல்லவிதமாக அமையாத நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வேட்கையில், ஆர்சிபியை எதிர்கொள்கிறது சிஎஸ்கே அணி.
undefined
சிஎஸ்கே இதற்கு முன் ஆடிய ஆறு போட்டிகளில் வெறும் 2 வெற்றியை மட்டுமே பெற்றுள்ள நிலையில், ஆர்சிபி அணி ஐந்து போட்டிகளில் 3 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாமிடத்தில் உள்ளது. எனவே டாப் 4ல் நுழைய ஆர்சிபிக்கும் இது முக்கியமான போட்டி.
undefined
சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். அந்த வகையில் இன்றைய போட்டி மிகக்கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
undefined
ஆர்சிபி அணியால் பெரும் தொகைக்கு எடுக்கப்பட்ட கிறிஸ் மோரிஸ், இந்த சீசனில் முதல் முறையாக இந்த போட்டியில் களமிறக்கப்படுகிறார்.
undefined
ஆர்சிபி ஆடும் லெவன்:தேவ்தத் படிக்கல், ஆரோன் ஃபின்ச், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), குர்கீரத் சிங் மன், ஷிவம் துபே, கிறிஸ் மோரிஸ், வாஷிங்டன் சுந்தர், இசுரு உடானா, நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல்.
undefined
சிஎஸ்கே அணியில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அணியில் எதற்கு இருக்கிறார் என்றே தெரியாத அளவிற்கு படுமோசமாக சொதப்பிவந்த கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு, தமிழகத்தை சேர்ந்த ஜெகதீசன் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.
undefined
கேதர் ஜாதவ் தொடர்ச்சியாக சொதப்பியபோது, அவரது இருப்பு குறித்த கடும் விமர்சனங்கள் எழுந்தபோதும் கூட, அவர் தான் சிஎஸ்கேவின் 4ம் வரிசை வீரர் என்று பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் அவருக்கு ஆதரவாகவே பேசினார். ஆனாலும் கேகேஆருக்கு எதிரான போட்டியில் ஜெயிக்க வேண்டிய போட்டியில் படுமோசமாக சொதப்பி சிஎஸ்கேவின் தோல்விக்கு காரணமாக இருந்தார்.
undefined
அதற்கு காரணம் 12 பந்தில் அந்த போட்டியில் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். இந்த சீசனில் இதுவரை ஆறு போட்டிகளில் ஆடி வெறும் 58 ரன்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில், அவர் டெத் ஓவரில் பெரிய ஷாட் ஆடமுடியாமல் திணறியதையடுத்து அவர் நீக்கப்பட்டு ஜெகதீஷன் சேர்க்கப்பட்டுள்ளார்.
undefined
ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகிய 2 சீனியர், நட்சத்திர வீரர்கள் இந்த சீசனில் ஆடாதது பெரும் பின்னடைவாக அமைந்த நிலையில், சரியான அணி காம்பினேஷன் அமையாமல் ஹாட்ரிக் தோல்விகளை தழுவியது சிஎஸ்கே.
undefined
click me!