CSK vs RCB: சிஎஸ்கேவை தனி ஒருவனாக தெறிக்கவிட்ட கிங் கோலி..! சவாலான இலக்கை நிர்ணயித்த ஆர்சிபி

First Published Oct 10, 2020, 9:44 PM IST

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் அதிரடியான பேட்டிங்கால், சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது ஆர்சிபி அணி.
 

சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
undefined
சிஎஸ்கே பவுலர்கள் தொடக்கத்தில் மிக அருமையாக பந்துவீசினர். தீபக் சாஹர் 3வது ஓவரிலேயே ஃபின்ச்சை 2 ரன்னில் வீழ்த்தினார். அதற்கடுத்த ஓவரிலேயே ரன்னே அடிக்காமல் டிவில்லியர்ஸ் அவுட்டாக, அதன்பின்னர் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல்லும் 33 ரன்களில் அவுட்டானார்.
undefined
இதையடுத்து வாஷிங்டன் சுந்தர் கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். வாஷிங்டன் சுந்தருக்கு நன்றாக பேட்டிங் ஆட கிடைத்த வாய்ப்பு இது. ஒரு சிக்ஸருடன் 10 ரன்களை அடித்து சுந்தர் அவுட்டாக, ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடிய விராட் கோலி, டெத் ஓவர்களில் தெறிக்கவிட்டார்.
undefined
16 ஓவரில் தான் 100 ரன்களை எட்டிய ஆர்சிபி அணி, அந்த ஓவர் முடிவில் வெறும் 103 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. கடைசி 4 ஓவர்களில் விராட் கோலி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசியதுடன், பந்துகளை வீணடிக்காமல் 2 ரன்களாக ஓடினார். அதனால் 20 ஓவரில் 169 ரன்கள் அடித்த ஆர்சிபி அணி, 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
undefined
விராட் கோலி 52 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 90 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய ஷிவம் துபே 22 ரன்கள் அடித்தார்.
undefined
click me!