MI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு கூட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல

First Published Oct 28, 2020, 7:25 PM IST

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் பொல்லார்டு, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவரும் நிலையில், தலா 11 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸூம் இரண்டாமிடத்தில் இருக்கும் ஆர்சிபியும், முதலிடத்திற்கான போட்டியில் இன்று மோதுகின்றன.
undefined
அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொல்லார்டு ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். காயம் காரணமாக முந்தைய 2 போட்டிகளில் ஆடிராத ரோஹித் சர்மா, இந்த போட்டியிலும் ஆடவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
undefined
மும்பை இந்தியன்ஸ் அணி:டி காக்(விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, பொல்லார்டு(கேப்டன்), ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட், பும்ரா.
undefined
ஆர்சிபி அணியில் 3 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே, தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆடமுடியாமல், இன்ஸ்விங் பந்துகளுக்கு திணறி தனது விக்கெட்டை இழந்துவரும் ஆரோன் ஃபின்ச், இந்த சீசனில் 11 போட்டிகளில் பேட்டிங் ஆடி, ஒரேயொரு அரைசதத்துடன் 236 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
undefined
எனவே இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே திணறிவரும் ஃபின்ச், நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக இளம் ஆஸ்திரேலிய வீரரான ஜோஷ் ஃபிலிப் சேர்க்கப்பட்டுள்ளார்.
undefined
அதேபோல நவ்தீப் சைனி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷிவம் துபேவும், மொயின் அலிக்கு பதிலாக டேல் ஸ்டெய்னும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
undefined
ஆர்சிபி அணி:தேவ்தத் படிக்கல், ஜோஷ் ஃபிலிப், கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), குர்கீரத் சிங் மன், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், இசுரு உடானா, சாஹல், முகமது சிராஜ், டேல் ஸ்டெய்ன்.
undefined
click me!