அவரு டேஞ்சரஸ் பேட்ஸ்மேன்னு தெரியும்.. ஆனால் இவ்வளவு டேஞ்சர்னு நான் நெனக்கல..! பாண்டிங்கே மிரண்டுடாப்ள

First Published Oct 28, 2020, 6:14 PM IST

ரிதிமான் சஹாவின் அதிரடியான பேட்டிங்கை கண்டு ரிக்கி பாண்டிங்கே மிரண்டுவிட்டார்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கிட்டத்தட்ட பிளே ஆஃப் இழந்துவிட்டாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பு இருப்பதால் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் டெல்லி கேபிடள்ஸை நேற்று எதிர்கொண்டது.
undefined
இதற்கு முந்தைய போட்டிகளில் தோற்றிந்த சன்ரைசர்ஸ் அணி, இந்த போட்டியில் ஜானி பேர்ஸ்டோவுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ரிதிமான் சஹாவை அணியில் எடுத்து தொடக்க வீரராக இறக்கிவிட்டது. இந்த சீசனில் இதற்கு முன்பாக ஒரேயொரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு பெற்றிருந்த சஹா, தனது திறமையை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற வெறியில், மீண்டுமொரு முறை செம அதிரடி இன்னிங்ஸ் ஆடினார்.
undefined
தொடக்கம் முதலே அடித்து ஆடிய அவர், வார்னருடன் இணைந்து அருமையாக ஆடினார். ரிதிமான் சஹாவும் வார்னரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 10 ஓவரில் 107 ரன்களை குவித்தனர். வார்னர் 66 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதமடித்த சஹா, 45 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்து பதினைந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
undefined
அவர் சதத்திற்காக சுயநலமாக நிதானமாக ஆடியிருந்தால் சதமடித்திருப்பார். ஆனால் அணிக்காக, அடித்து ஆடியதால் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். சஹாவின் அதிரடியான பேட்டிங்கால் தான் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 219 ரன்களை குவித்து, டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக வெற்றியை பெற்றது.
undefined
ரிதிமான் சஹா உள்நாட்டு போட்டிகளிலும், ஐபிஎல்லிலும் இதுமாதிரியான பல அதிரடி இன்னிங்ஸ்களை ஆடி தெறிக்கவிட்டுள்ளார். ஆனாலும் அவருக்கு அதிரடி பேட்ஸ்மேன் என்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற தனது ஆதங்கத்தை சச்சின் டெண்டுல்கர் வெளிப்படுத்தியிருந்தார். ரிதிமான் சஹாவின் பேட்டிங்கை, சச்சின், சேவாக் ஆகியோர் வெகுவாக பாராட்டியிருந்தனர்.
undefined
அந்த உரையாடலில், கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்படும்போது, பேட்ஸ்மேன் அப்படி நகர்ந்து சென்றால், என்ன செய்வது என்ற நியாயமான கேள்வியை அஷ்வின் முன்வைத்ததாக கூறிய பாண்டிங், ஆனாலும் மன்கட் செய்யாமல் எச்சரிக்கை விட வேண்டும் என்பதே தனது கருத்து எனவும், அதேவேளையில் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றக்கூடாது எனவும் கூறிய பாண்டிங், அதுமாதிரி பந்துவீசுவதற்கு முன்பாகவே ரன்னர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் நகர்ந்து சென்றால், ரன் பெனால்டி விதிக்கும்படி ஐசிசி விதியை மாற்றலாம் என்று பாண்டிங் தெரிவித்திருந்தார்.
undefined
click me!