ஐபிஎல் 2020: எத்தனை தடவை நிரூபித்தாலும் அவரை மட்டும் குறைத்து மதிப்பிடுவது ஏன்..? சச்சின் டெண்டுல்கர் ஆதங்கம்

First Published Oct 28, 2020, 1:04 PM IST

தன்னால் அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்ய முடியும் என்று ரிதிமான் சஹா பலமுறை நிரூபித்தாலும், அவரை தொடர்ச்சியாக குறைத்து மதிப்பிடுவது ஏன் என புரியவில்லை என்று சச்சின் டெண்டுல்கர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கிட்டத்தட்ட பிளே ஆஃப் இழந்துவிட்டாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பு இருப்பதால் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் டெல்லி கேபிடள்ஸை நேற்று எதிர்கொண்டது.
undefined
இதற்கு முந்தைய போட்டிகளில் தோற்றிந்த சன்ரைசர்ஸ் அணி, இந்த போட்டியில் ஜானி பேர்ஸ்டோவுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ரிதிமான் சஹாவை அணியில் எடுத்து தொடக்க வீரராக இறக்கிவிட்டது. இந்த சீசனில் இதற்கு முன்பாக ஒரேயொரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு பெற்றிருந்த சஹா, தனது திறமையை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற வெறியில், மீண்டுமொரு முறை செம அதிரடி இன்னிங்ஸ் ஆடினார்.
undefined
தொடக்கம் முதலே அடித்து ஆடிய அவர், வார்னருடன் இணைந்து அருமையாக ஆடினார். ரிதிமான் சஹாவும் வார்னரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 10 ஓவரில் 107 ரன்களை குவித்தனர். வார்னர் 66 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதமடித்த சஹா, 45 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்து பதினைந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
undefined
அவர் சதத்திற்காக சுயநலமாக நிதானமாக ஆடியிருந்தால் சதமடித்திருப்பார். ஆனால் அணிக்காக, அடித்து ஆடியதால் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். சஹாவின் அதிரடியான பேட்டிங்கால் தான் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 219 ரன்களை குவித்து, டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக வெற்றியை பெற்றது.
undefined
ரிதிமான் சஹா உள்நாட்டு போட்டிகளிலும், ஐபிஎல்லிலும் இதுமாதிரியான பல அதிரடி இன்னிங்ஸ்களை ஆடி தெறிக்கவிட்டுள்ளார். ஆனாலும் அவருக்கு அதிரடி பேட்ஸ்மேன் என்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர் ஒரு தரமான ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பராகவும் டெஸ்ட் பேட்ஸ்மேனாகவுமே பார்க்கப்படுகிறார்.
undefined
இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸூக்கு எதிரான அவரது ருத்ரதாண்டவத்தை பார்த்த சச்சின் டெண்டுல்கர், ரிதிமான் சஹாவின் அடித்து ஆடும் திறமையை குறைத்து மதிப்பிடுவது மட்டும் இன்னும் மாறவேயில்லை என்று சச்சின் டெண்டுல்கர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
undefined
மேலும், மற்றொரு பதிவில், ரொம்ப ஸ்மார்ட்டான பேட்டிங் சஹா.. பந்தின் லைன்&லெந்த்தை பிக் செய்த பின்னர், அவரது ஷாட்டுகள் அனைத்தும் வேற லெவலில் இருந்தன. மிகச்சிறந்த இன்னிங்ஸ் சஹா.. நான் உங்கள் இன்னிங்ஸை ரசித்து பார்த்தேன் என்று சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்துள்ளார்.
undefined
click me!