ஆழம் தெரியாம ஆள முடியாது கோதாவில் பட்ட அவமானத்திற்கு எல்லாம் பலி தீர்க்கும் கும்ப்ளே..!

First Published Oct 27, 2020, 9:38 AM IST

2020 ஐபிஎல் தொடர் அடுத்தடுத்த திருப்பங்களுடன் நடந்து கொண்டு இருக்கிறது. தொடரின் தொடக்கத்தில் அதிகம் நம்பிக்கை அளித்த ராஜஸ்தான், சென்னை போன்ற அணிகள் மிக மோசமாக ஆடி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வருகிறது.
 

தொடக்கத்தில் அடுத்தடுத்து தோல்விகளை குவித்து வந்த கொல்கத்தா, பஞ்சாப் போன்ற அணிகள் தொடர் வெற்றிகள் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து உள்ளது.
undefined
அதிலும் பஞ்சாப் அணி இந்த தொடரில் மீண்டு வந்தது எல்லாம் யாருமே எதிர்பார்க்காத டிவிஸ்ட் என்றுதான் சொல்ல வேண்டும். முதல் 7 போட்டிகளில் பஞ்சாப் அணி வெறும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றது. இதனால் பஞ்சாப் அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துவிடும் என்றுதான் பலரும் கணித்து இருந்தனர். பஞ்சாப் அணிதான் பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் முதல் அணி என்று கணிக்கப்பட்டது.
undefined
பஞ்சாப் அணி தொடக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்த போது அணியின் பயிற்சியாளர் கும்பளே மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. கும்ப்ளேதான் அணியை காலி செய்துவிட்டார். அணியில் முழுக்க முழுக்க கர்நாடக அணி வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அணியின் வெற்றி மீது கும்ப்ளேவிற்கு விருப்பம் இல்லை என்று கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
undefined
அணியின் தோல்விக்கு கும்ப்ளே அல்லது கே. எல் ராகுல் இருவரில் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும் என்று கடுமையான விமர்சனங்களை வைத்து இருந்தார். ஆனால் தற்போது விமர்சனங்களை கடந்து கும்ப்ளே தனது பஞ்சாப் அணியை மீட்டு கொண்டு வந்து இருக்கிறார். கர்நாடக வீரர்களை உட்கார வைத்துவிட்டு கெயிலை உள்ளே கொண்டு வந்து சமமான அணியை உருவாக்கி உள்ளார்.
undefined
கும்ப்ளே எப்போதும் தனது ஐபிஎல் அணியை உணர்வு பூர்வமாக பார்த்துக்கொள்ள கூடியவர். தனது அணியின் தோல்வியை தன்னுடைய தோல்வியாக கருத கூடியவர்.. இவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் கண்டிப்பாக அவரை காயப்படுத்தி இருக்கும். தற்போது இந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் மொத்தமாக கும்ப்ளே திருப்பி கொடுத்து உள்ளார்.
undefined
click me!