ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. இன்றைய போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன.
இரு அணிகளுமே இதுவரை தலா 11 போட்டிகளில் ஆடி 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ளன. நெட் ரன்ரேட் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்திலும் ஆர்சிபி 2ம் இடத்திலும் உள்ளன.
எனவே முதலிடத்தை தீர்மானிக்கும் முக்கியமான இன்றைய போட்டி அபுதாபியில் நடக்கிறது. மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் இந்த சீசனில் மோதிய முந்தைய போட்டியில், சூப்பர் ஓவரில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. எனவே இன்றைய போட்டியில் ஆர்சிபியை பழிதீர்க்கும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.
காயத்தால் கடந்த 2 போட்டிகளில் ஆடாத மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, வலையில் பயிற்சி செய்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி டுவிட்டரில் பதிவிட்டிருந்தது. ஆனாலும் ரோஹித் சர்மா, ஆர்சிபிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆடமாட்டார் என்றே தெரிகிறது. எனவே கடந்த போட்டியில் களமிறங்கிய அதே ஆடும் லெவனுடன் தான் பொல்லார்டு தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கும்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்:டி காக்(விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, பொல்லார்டு(கேப்டன்), ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட், பும்ரா.
ஆர்சிபி அணியில் ஒரு மாற்றம் செய்யப்படும். மொயின் அலி நீக்கப்பட்டு, மீண்டும் இசுரு உடானா சேர்க்கப்படுவார்.
ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்:ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), குர்கீரத் சிங் மன், வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், இசுரு உடானா, சாஹல், நவ்தீப் சைனி, முகமது சிராஜ்.