ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் மோதுகின்றன.
துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, ஆர்சிபி அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சவுரப் திவாரி காயத்தால் இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக இளம் இடது கை அதிரடி வீரர் இஷான் கிஷான் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சீசனின் முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி ஆடும் லெவனில் இஷான் கிஷான் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக சவுரப் திவாரிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த போட்டியில் இஷான் கிஷான் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஒரு மாற்றம் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியில் செய்யப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்:ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ட்ரெண்ட் போல்ட், பாட்டின்சன், ராகுல் சாஹர், பும்ரா.