ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனிலும் வழக்கம்போலவே கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு, தொடக்கமே மரண அடியாக விழுந்துள்ளது.
சன்ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி ஆடிய முதல் போட்டியில், ஆர்சிபி தட்டுத்தடுமாற்றி வெற்றி பெற்ற நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
ஆர்சிபி அணி இந்த சீசனில் நல்ல பேலன்ஸ் கொண்ட சிறந்த அணியாக இருக்கிறது என்று அந்த அணியின் கேப்டன் விராட் கோலி, இந்த சீசன் தொடங்குவதற்கு முன் தெரிவித்திருந்தார். ஆனாலும் அந்த அணியின் டெத் பவுலிங் இன்னும் மோசமாகவே உள்ளது. பேட்டிங், பவுலிங் என 2 வகையிலும் பங்களிப்பு செய்வார் என நம்பி எடுக்கப்பட்ட கிறிஸ் மோரிஸ் காயம் காரணமாக இதுவரை ஆர்சிபி அணியில் ஆடவில்லை. இன்றைய போட்டியிலும் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடிவந்த தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை இந்த சீசனில் ரூ.10 கோடிக்கு எடுத்தது ஆர்சிபி அணி. அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து ஆல்ரவுண்டரான மோரிஸ், அணி காம்பினேஷனுக்கு வலுசேர்ப்பார் என்று எடுக்கப்பட்டார்.
ஆனால் காயம் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 2 அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கிறிஸ் மோரிஸ் ஆடவில்லை. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே பங்களிப்பு செய்யக்கூடிய வீரர் என்பதால் அணியில் எடுக்கப்பட்ட மோரிஸ், ஆர்சிபி அணிக்காக ஆடமுடியாதது பெரும் இழப்புதான்.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸூக்கு எதிரான இன்றைய போட்டியிலும் அவர் ஆடமாட்டார் என்பதை ஆர்சிபி அணியின் டைரக்டர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ் மோரிஸ் ஃபிட்னெஸில் மேம்பட்டுவருகிறார். ஆனால் அவர் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆடமாட்டார் என்று மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.