ஐபிஎல் 2020: கம்முனு இருக்கும் ஹர்திக் பாண்டியா.. கடைசியில் காரணத்தை சொன்ன ஜெயவர்தனே

First Published Sep 24, 2020, 7:14 PM IST

ஐபிஎல் 13வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் இதுவரை 2 போட்டிகளில் ஆடியுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா பவுலிங் போடாததற்கான காரணத்தை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 4 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 2 போட்டிகளில் ஆடி ஒன்றில் வென்றுள்ளது.
undefined
சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி, கேகேஆருக்கு எதிரான நேற்றைய போட்டியில் 195 ரன்களை குவித்து, கேகேஆர் அணியை 146 ரன்களுக்கு சுருட்டி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, வெற்றி கணக்கை தொடங்கியதுடன், புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
undefined
கடந்த 2 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பந்துவீசவில்லை. ஹர்திக் பாண்டியா நல்ல ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர். ஆனாலும் அவர் 2 போட்டிகளிலுமே பந்துவீசவில்லை. ஹர்திக் பாண்டியா வீசாததால் தான், நேற்றைய போட்டியில் பொல்லார்டுக்கு பவுலிங் கொடுத்தார் கேப்டன் ரோஹித் சர்மா.
undefined
இந்நிலையில், ஹர்திக் பாண்டியா பந்துவீசாததற்கான காரணத்தை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
undefined
இதுகுறித்து பேசிய மஹேலா ஜெயவர்தனே, ஹர்திக் பாண்டியா நாளுக்கு நாள் ஃபிட்னெஸில் மேம்பட்டுக்கொண்டே வருகிறார். நாங்கள் அவரை பந்துவீச வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அதனால் தான் அவர் பந்துவீசவில்லை. அவர் பந்துவீச வசதியாக உணர்ந்தால், கண்டிப்பாக பந்துவீச வைப்போம்.
undefined
ஹர்திக் பாண்டியா கடந்த 2 ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக காயங்களால் அவதிப்பட்டுவருகிறார். அவர் காயங்களிலிருந்து மீண்டு ஃபிட்னெஸுடன் இருந்தாலும் கூட, அவரை பந்துவீசவைத்து ரிஸ்க் எடுக்க மும்பை இந்தியன்ஸ் விரும்பாததால் தான் அவர் பந்துவீசவில்லை.
undefined
click me!