ஐபிஎல் 2020: இதான்டா நடக்கும்னு முன்கூட்டியே சரியா சொன்ன தீர்க்கதரிசி சச்சின்

First Published Sep 24, 2020, 5:48 PM IST

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டியின் இடையே, மாஸ்டர் பிளாஸ்டர் தெரிவித்த கருத்து, 2வது இன்னிங்ஸில் அப்படியே நடந்தது.
 

ஐபிஎல் 13வது சீசனின் நேற்றைய போட்டியில் கேகேஆர் அணியும் மும்பை இந்தியன்ஸும் மோதின. அபுதாபியில் நடந்த இந்த போட்டியில் கேகேஆர் அணி கொஞ்சம் கூட போராடாமல் மும்பை இந்தியன்ஸிடம் சரணடைந்து, படுதோல்வியை தழுவியது.
undefined
முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா செம ஃபார்மில் அருமையாக ஆடினார். தனது இயல்பான ஆட்டத்தின் மூலம் மிட் விக்கெட் மற்றும் எக்ஸ்ட்ரா கவர் திசைகளில் சிக்ஸர்களை அசால்ட்டாக பறக்கவிட்டு 54 பந்தில் 6 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 80 ரன்களை விளாசினார்.
undefined
மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவும் அருமையாக ஆடி பவுண்டரிகளை விளாசி 28 பந்தில் 47 ரன்களை குவித்தார். கேகேஆர் அணியால் ரூ.15.5 கோடிக்கு எடுக்கப்பட்ட பாட் கம்மின்ஸ் மற்றும் சந்தீப் வாரியர், சுனில் நரைன், குல்தீப் யாதவ் என ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங் பாரபட்சமெல்லாம் பார்க்காமல், ரோஹித்தும் சூர்யகுமாரும் விளாசி தள்ளினர்.
undefined
அவர்கள் அடிப்பதற்கு ஏற்றாற்போலவே ஷார்ட் பிட்ச் பந்துகளை வாரி வழங்கினர் கேகேஆர் பவுலர்கள். அதனால் 195 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 196 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆடிய கேகேஆர் வீரர்களில் ஒருவர் கூட சரியாக ஆடவில்லை. அதிகபட்சமாக கம்மின்ஸ் தான் 33 ரன்கள் அடித்தார். தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் அடித்தார். மோர்கன், ரசல் எல்லாம் பதின்களில் ஆட்டமிழந்தனர்.
undefined
மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் ஆடிய அதே பிட்ச்சில் தான் கேகேஆரும் ஆடுகிறதா என்ற சந்தேகம் எழும் அளவிற்கு படுமோசமாக பேட்டிங் ஆடினர் கேகேஆர் வீரர்கள். அதற்கு முக்கியமான காரணம், மும்பை இந்தியன்ஸ் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டின் அருமையான பவுலிங் தான்.
undefined
கேகேஆர் பவுலர்கள் வீசியதை போல இல்லாமல், நல்ல லைன்&லெந்த்தில் அருமையாக வீசி கேகேஆர் வீரர்களை திணறடித்தனர். தொடக்கம் முதலே சிறப்பாக வீசி கேகேஆரை எந்த சூழலிலும் ஆதிக்கம் செலுத்தவிடாமல் கட்டுக்குள்ளே வைத்து 146 ரன்களுக்கு சுருட்டி அபார வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ்.
undefined
மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் அசத்துவார்கள் என்று, முதல் இன்னிங்ஸ் முடிந்தவுடனே டுவீட் செய்தார் சச்சின். “இந்த ஆடுகளம் 2வது இன்னிங்ஸில் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கிறேன். முதல் இன்னிங்ஸில் கேகேஆர் அணியில் ஃபாஸ்ட் பவுலர் ஷிவம் மாவியை தவிர வேறு யாருமே சரியான லெந்த்தில் வீசவில்லை; ஷார்ட் பிட்ச் பந்துகளை அதிகமாக வீசினார்கள். அதனால் ரோஹித்தும் சூர்யகுமாரும் அடித்து நொறுக்கிவிட்டனர். ஆனால் 2வது இன்னிங்ஸில் ஃபாஸ்ட் பவுலர்கள் அசத்துவார்கள்” என்று டுவீட் செய்திருந்தார் சச்சின் டெண்டுல்கர். அதேபோலத்தான் நடந்தது.
undefined
click me!