ஐபிஎல்லில் ஒவ்வொரு சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடனேயே களமிறங்கி, ஆனால் ஏமாற்றத்துடன் திரும்புவதையே வாடிக்கையாக கொண்டுள்ள ஆர்சிபி அணி, இந்த சீசனில் கோப்பையை வெல்வதில் உறுதியாக உள்ளது.
ஆரோன் ஃபின்ச், கிறிஸ் மோரிஸ் ஆகிய சிறந்த வீரர்களை அணியில் பெற்றிருப்பதால், இந்த முறை ஆர்சிபி அணி வலுவான காம்பினேஷனாக இருப்பதாக கேப்டன் கோலி மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
அதற்கேற்ப, சன்ரைசர்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் அந்த அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கிய ஆர்சிபி அணி, இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது.
ஆர்சிபி அணி இந்த போட்டியில், முதல் போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வின்னிங் டீம் காம்பினேஷனை மாற்ற விரும்பாது என்றே கருதப்படுகிறது.
இந்நிலையில், ஆர்சிபி அணி பேலன்ஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, ஆர்சிபி அணி, ஜோஷ்வா ஃபிலிப்புக்கு பதிலாக கண்டிப்பாக மொயின் அலியை ஆடவைக்க வேண்டும். ஆர்சிபி அணி ஃபாஸ்ட் பவுலிங் காம்பினேஷனை மாற்ற விரும்பும் என நினைக்கிறேன். ஆனால் மாற்ற நினைத்தாலும், பெரியளவில் அந்த அணியில் அதற்கான ஆப்சன்கள் இல்லை.
என்னுடைய இன்னொரு எண்ணம் என்னவென்றால், இசுரு உடானாவை டேல் ஸ்டெய்ன் அல்லது ஃபிலிப்புக்கு பதிலாக இறக்கலாம். குர்கீரத் சிங் மன்னை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக எடுக்கலாம். ஆர்சிபி அணியின் பவுலிங் யூனிட் இன்னும் பலவீனமாகவே தெரிகிறது. டேல் ஸ்டெய்ன் நல்ல டெத் பவுலர் கிடையாது. உமேஷ் யாதவ் அல்லது சிராஜ் ஆகிய இருவரில் யாரை எடுத்தாலும், அவர்கள் இருவருமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தமாட்டார்கள். நவ்தீப் சைனி ஒருவர் மட்டுமே ஆர்சிபி அணியின் சிறந்த டெத் பவுலர் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.