KKR vs CSK: இனிமேலும் உன்னைய நம்பி நோ யூஸ்.. சீனியர் வீரரை அதிரடியாக கழட்டிவிட்ட சிஎஸ்கே.. கடினமான முடிவு

First Published Oct 7, 2020, 7:25 PM IST

சிஎஸ்கேவிற்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் கேகேஆரும் சிஎஸ்கேவும் மோதுகின்றன. இரு அணிகளுமே இதற்கு முன் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், 3வது வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளன.
undefined
அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக், பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
undefined
கேகேஆர் அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் தோற்றிருந்தாலும், அதே அணி காம்பினேஷனுடன் தான் கேகேஆர் களமிறங்கியுள்ளது.
undefined
கேகேஆர் அணி:ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயன் மோர்கன், ஆண்ட்ரே ரசல், தினேஷ் கார்த்திக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், ஷிவம் மாவி, நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி.
undefined
சிஎஸ்கே அணியில் ஒரு அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சீனியர் ரிஸ்ட் ஸ்பின்னரான பியூஷ் சாவ்லா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கரன் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
undefined
அனுபவம் வாய்ந்த சீனியர் ரிஸ்ட் ஸ்பின்னரான பியூஷ் சாவ்லா, இந்த சீசனில் முதல் முறையாக சிஎஸ்கேவிற்காக ஆடிவரும் நிலையில், மும்பை இந்தியன்ஸூக்கு எதிரான முதல் போட்டியில் நன்றாக பந்துவீசினார். ஆனால் அதன்பின்னர் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரன்களை வாரி வழங்கினார். அவரது பவுலிங்கை சஞ்சு சாம்சன் பொளந்துகட்டினார். ஆனால் அந்த போட்டி சிறிய மைதானமான ஷார்ஜாவில் நடந்ததால், அனைத்து பவுலர்களின் பவுலிங்குமே அடித்து நொறுக்கப்பட்டது.
undefined
அதனால் பியூஷ் சாவ்லா மீது நம்பிக்கை அடுத்தடுத்த போட்டிகளிலும் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் பியூஷ் சாவ்லா அதிகமாக விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. சிஎஸ்கே அணியில் இதுவரை பொதுவாகவே ஸ்பின்னர்கள் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள். அஷ்வின், ஜடேஜா, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் முக்கியமான நேரங்களில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுப்பார்கள். ஆனால் ஹர்பஜன் இந்த சீசனில் ஆடாத நிலையில், அந்த பணியை செவ்வனே செய்யவில்லை பியூஷ் சாவ்லா. இந்த சீசனில் இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளில் ஆறு விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். 151 ரன்களை வழங்கியுள்ளார் பியூஷ் சாவ்லா.
undefined
இந்நிலையில், இன்றைய போட்டியில் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பேட்டிங் ஆட தெரிந்த ஸ்பின்னரான கரன் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார். கரன் ஷர்மா நல்ல ஃபீல்டரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
சிஎஸ்கே அணி:ஷேன் வாட்சன், டுப்ளெசிஸ், அம்பாதி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), சாம் கரன், ஜடேஜா, பிராவோ, கரன் ஷர்மா, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.
undefined
click me!