ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவிற்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று செம கம்பேக் கொடுத்துள்ளது சிஎஸ்கே.

இந்த சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டு ஆடிய சிஎஸ்கே, மும்பையை வீழ்த்தி வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கியது. ஆனால் அதற்கு பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 3 அணிகளிடமும் அடுத்தடுத்து தோல்வியடைந்து ஹாட்ரிக் தோல்விகளை தழுவியது.

சிஎஸ்கே அணியின் காம்பினேஷன் வலுவாக இல்லாததும், பேட்டிங்கில் நல்ல தொடக்கம் அமையாததுமே தோல்விகளுக்கு காரணமாக இருந்தது. ராயுடு, பிராவோ ஆகியோர் அணியில் இணைந்த பின்னர், ஷர்துல் தாகூரும் அணியில் எடுக்கப்பட்டதால், கூடுதல் பவுலிங் ஆப்சனுடன், பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் சிறந்த அணி காம்பினேஷனாக உருவானது சிஎஸ்கே.

சிஎஸ்கே அணியில் ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ் ஆகியோரின் இருப்பு குறித்த கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்தன. ஆனால் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் தோனியும் அணி நிர்வாகமும் தொடர் வாய்ப்பளித்தனர். அந்த நம்பிக்கையை வீணடிக்காமல், பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ஷேன் வாட்சன் அடித்து நொறுக்கினார். தொடக்க வீரர்களான வாட்சனும் டுப்ளெசிஸும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் மிகச்சிறப்பாக ஆடி சிஎஸ்கேவிற்கு 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.

வாட்சன், கேதர் ஜாதவ் இருப்பை போன்றே, தொடர்ச்சியாக கேள்விக்குள்ளான ஒரு விஷயம், தோனியின் பேட்டிங் ஆர்டர். தோனி ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் 7ம் வரிசையில் பேட்டிங் ஆட வந்தது விமர்சனத்துக்குள்ளானது. சன்ரைசர்ஸூக்கு எதிராக ஐந்தாம் வரிசையில் இறங்கினார். அதுவும் விமர்சனத்துக்குள்ளானது. தோனி ஏன் சாம் கரனுக்கு முன்னால் இறங்கினார் என்று.. இப்படியாக தோனி எந்த பேட்டிங் ஆர்டரில் இறங்கினாலும் விமர்சங்கள் எழுந்தன.

இந்நிலையில், பஞ்சாப்புக்கு எதிராக வாட்சனும் டுப்ளெசிஸூமே இணைந்து போட்டியை முடித்துவிட, அந்த போட்டியில் அவர்கள் இருவரும் சிறப்பாக பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது, சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங்கிடம், கவாஸ்கர் கிண்டலாக ஒரு கேள்வி கேட்டார்.

”இந்த போட்டியில் விக்கெட்டே விழாமல் சிஎஸ்கே ஜெயித்துவிட்டால், தோனியின் பேட்டிங் ஆர்டர் குறித்த கேள்வியே எழாது அல்லவா?” என்று நகைச்சுவையாக கேட்டார் கவாஸ்கர்.

அதற்கு, தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் விதமாக பதிலளித்த ஃப்ளெமிங், அப்போது கூட தோனி ஏன் தொடக்க வீரராக இறங்கவில்லை என்று கேட்டாலும் கேட்பார்கள் என்று செம நகைச்சுவையாக பதிலளித்தார் ஃப்ளெமிங்.