ஐபிஎல் 2020: கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆப்படித்த ஐபில் நிர்வாகம்.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சோகம்

First Published Oct 7, 2020, 4:43 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று வெற்றிகரமாக தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அடுத்த 3 போட்டிகளிலும் தோற்று புள்ளி பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளது.
undefined
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பெரும்பாலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பட்லர், ஸ்மித், சாம்சனையே அதிகமாக சார்ந்திருப்பதால், அவர்கள் சொதப்பினால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மண்ணை கவ்விவிடுகிறது.
undefined
அந்தவகையில், மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்த 194 ரன்கள் என்ற இலக்கை விரட்டமுடியாமல் வெறும் 136 ரன்களுக்கு சுருண்டு 57 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
undefined
அந்த போட்டியை பொறுத்தமட்டில் 44 பந்தில் பட்லர் 70 ரன்கள் அடித்து அவரது ஃபார்மை நிரூபித்தது மட்டுமே ராஜஸ்தான் அணிக்கு நம்பிக்கையூட்டும் மற்றும் அனுகூலமான விஷயம். பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்துள்ள நிலையில், அவர் விரைவில் அந்த அணிக்காக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி படுதோல்வி அடைந்தது மட்டுமல்லாது, பந்துவீசவும் அதிகமான நேரம் எடுத்துக்கொண்டுள்ளது. ஐபிஎல் விதிப்படி, பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது தவறு, என்பதால், அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
undefined
click me!