நீங்கலாம் திருந்த வாய்ப்பே இல்ல.. அந்த நேரத்துல ஓகே.. அதுக்காக இன்னுமா அவரையே புடிச்சு தொங்கிட்டு இருப்பீங்க.?

First Published Oct 7, 2020, 3:39 PM IST

சிஎஸ்கே அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் கேகேஆர் அணியும் சிஎஸ்கே அணியும் மோதுகின்றன. கேகேஆர் அணி இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 2 வெற்றியுடன் 4 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் உள்ள நிலையில், சிஎஸ்கே அணி, ஆடிய ஐந்து போட்டிகளில் 2வெற்றியுடன் 4 புள்ளிகளை பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளது.
undefined
எனவே இரு அணிகளுமே தங்களது 3வது வெற்றியை எதிர்நோக்கி இன்றைய போட்டியில் ஆடுகின்றன. ஹாட்ரிக் தோல்விகளிலிருந்து மீண்டு, பஞ்சாப்புக்கு எதிராக 10 விக்கெட்டுகள் வித்தியாச வெற்றியுடன் சிஎஸ்கே செம கம்பேக் கொடுத்து வலுவாக உள்ளது.
undefined
கேகேஆர் அணியில் மோர்கன், ரசல், கில், ராணா, கம்மின்ஸ் என சிறந்த வீரர்கள் பலர் இருந்தாலும், அந்த அணி தோற்ற இரு போட்டிகளிலும் படுமோசமாக தோற்றது.
undefined
கேகேஆர் அணியில் நல்ல வீரர்கள் இருந்தாலும், அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் சரியில்லாத காரணத்தால் தான் தோற்கிறது. கேகேஆர் பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டும் என்று அந்த அணிக்கு 2 முறை கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கம்பீரே கூறியிருந்தார்.
undefined
சுனில் நரைன் கடந்த சில சீசன்களுக்கு முன்பு கேகேஆர் அணியின் தொடக்க வீரராக இறக்கிவிடப்பட்டார். பவர்ப்ளேயில் அவரும் சில பெரிய ஷாட்டுகளை ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளார். ஆனால் ராகுல் திரிபாதி போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேனை அணியில் வைத்துக்கொண்டே, இன்னும் சுனில் நரைனேயே தொடக்க வீரராக இறக்குவது சரியல்ல என்பதே பல முன்னாள் ஜாம்பவான்களின் கருத்து.
undefined
சுனில் நரைன், மிதவேகப்பந்து அல்லது ஸ்பின் பவுலிங்கை நன்றாக அடித்து ஆடுவார். ஆனால் ரபாடா, பும்ரா, ஆர்ச்சர், டிரெண்ட் போல்ட், நோர்க்யா ஆகிய அதிவேகமாக வீசக்கூடிய ஃபாஸ்ட் பவுலர்களின் பவுலிங்கை, குறிப்பாக பவுன்ஸர்களை எதிர்கொள்ள திணறுகிறார். அதனால் பந்துகளை வீணடித்து அவுட்டும் ஆகிவிடுகிறார். எனவே சூழலுக்கேற்ப முடிவுகளை மாற்ற வேண்டும். இந்த சீசனில் இதுவரை ஆடிய 4 போட்டிகளில் வெறும் 27 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
undefined
எனவே ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக இறக்கிவிட்டு, சுனில் நரைனை பின்வரிசையில்(அதாவது 8 அல்லது 9) இறக்கவேண்டும் என்பதே பலரது கருத்து. ராகுல் திரிபாதி டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக கேகேஆர் 229 ரன்களை விரட்டியபோது, 8ம் வரிசையில் இறங்கி 16 பந்தில் 36 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.
undefined
கேகேஆர் அணியின் தொடக்க வீரராக யார் இறங்குவார் என்பதும், மோர்கன், ரசலை இறக்கிவிட்டு பின் வரிசையில் தினேஷ் கார்த்திக் இறங்கவேண்டும் என்பது போன்ற விஷயங்களால் பேட்டிங் ஆர்டர் குறித்த கேள்விகள் தான் உள்ளனவே தவிர, கேகேஆரை பொறுத்தவரை ஆடும் லெவனில் மாற்றம் இருக்காது. டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான கடந்த போட்டியில் களமிறங்கிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் அந்த அணி களமிறங்கும்.
undefined
கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவன்:ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயன் மோர்கன், ஆண்ட்ரே ரசல், தினேஷ் கார்த்திக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், ஷிவம் மாவி, நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி.
undefined
click me!