KXIP vs KKR: இன்னுமா அவரை நம்பிகிட்டு இருக்கீங்க.. உங்க தலையெழுத்தை மாற்ற முடியாது பஞ்சாப்..! கேகேஆர் பேட்டிங்

First Published Oct 10, 2020, 3:40 PM IST

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் படுமோசமாக சொதப்பிய அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் தான். முதல் ஆறு போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி, இனிமேல் பிளே ஆஃபிற்கு தகுதிபெறுவது என்பது நடக்காத காரியம்.
undefined
எனினும் இந்த சீசனை ஓரளவிற்காவது சிறப்பாக முடிக்க வேண்டும் என்றால், அந்த அணி குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை பெற வேண்டும். தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருக்கும் அந்த அணி, இன்று கேகேஆரை எதிர்கொள்கிறது.
undefined
அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
undefined
இந்த போட்டியில் கேகேஆர் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறிய காயம் காரணமாக இளம் ஃபாஸ்ட் பவுலர் ஷிவம் மாவி ஆடாத காரணத்தால் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
undefined
கேகேஆர் அணி:ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), இயன் மோர்கன், ஆண்ட்ரே ரசல், பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், பிரசித் கிருஷ்ணா, நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி.
undefined
பஞ்சாப் அணியிலும் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷெல்டான் கோட்ரெலுக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டான் சேர்க்கப்பட்டுள்ளார்.
undefined
இந்த சீசனில் பஞ்சாப் அணியால் ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல், இதுவரை ஆறு போட்டிகளில் பேட்டிங் ஆடி வெறும் 48 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். மிடில் ஆர்டரில் பஞ்சாப் அணிக்கு வலுசேர்ப்பதுடன், ஃபினிஷிங் ரோலையும் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையுடன் எடுக்கப்பட்ட அவர், எல்லா சீசனை போலவும் இந்த சீசனிலும் தன்னை நம்பி எடுத்த அணிக்கு எதுவும் செய்யவில்லை. ஆனாலும் அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆடும் லெவனில் வாய்ப்பளித்து கொண்டிருக்கிறது பஞ்சாப் அணி.
undefined
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:கேஎல் ராகுல்(கேப்டன்), மயன்க் அகர்வால், மந்தீப் சிங், பிரப்சிம்ரன் சிங்(விக்கெட் கீப்பர்), நிகோலஸ் பூரான், க்ளென் மேக்ஸ்வெல், கிறிஸ் ஜோர்டான், முஜிபுர் ரஹ்மான், ரவி பிஷ்னோய், ஷமி, அர்ஷ்தீப் சிங்.
undefined
click me!