ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் கேகேஆர் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக், மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்ததையடுத்து, மும்க்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது இரண்டாவது போட்டி. கேகேஆருக்கு இந்த சீசனில் இதுதான் முதல் போட்டி. மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது. அந்த அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கேகேஆர் அணியில் 4 வெளிநாட்டு வீரர்களாக எதிர்பார்த்தபடியே, சுனில் நரைன், ரசல், மோர்கன், கம்மின்ஸ் ஆகிய நால்வரும் எடுக்கப்பட்டுள்ளனர்.
அந்த அணியின் ஃபாஸ்ட் பவுலர் பிரசித் கிருஷ்ணா, யாருமே எதிர்பார்த்திராத வகையில் கழட்டிவிடப்பட்டுள்ளார். அவர் கடந்த சீசனில் அந்த அணிக்காக பல நல்ல ஸ்பெல்களை வீசினார். ஆனால் இந்த போட்டியில் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. கம்மின்ஸுடன், மற்ற 2 ஃபாஸ்ட் பவுலர்களாக ஷிவம் மாவியும் சந்தீப் வாரியரும் எடுக்கப்பட்டுள்ளனர்.
கேகேஆர் அணி:சுனில் நரைன், ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, இயன் மோர்கன், ஆண்ட்ரே ரசல், தினேஷ் கார்த்திக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), நிகில் நாயக், பாட் கம்மின்ஸ், குல்தீப் யாதவ், சந்தீப் வாரியர், ஷிவம் மாவி.