ஐபிஎல் 13வது சீசனில் இன்று நடக்கும் ஐந்தாவது போட்டியில் கேகேஆர் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில், டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக், இதற்கு முந்தைய போட்டிகளில், டாஸ் வென்ற கேப்டன்கள் தேர்வு செய்ததை போலவே, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்த சீசன் தொடங்கியதிலிருந்து, நேற்றுவரை நடந்த 4 போட்டிகளிலுமே டாஸ் வென்ற அணி, பவுலிங்கைத்தான் தேர்வு செய்தது. வெற்றியோ தோல்வியோ இலக்கை விரட்டவே, அனைத்து அணிகளும் விரும்பின. அதேபோலத்தான் தினேஷ் கார்த்திக்கும் பவுலிங்கை தேர்வு செய்தார். ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள், டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்யும் முடிவுக்கு எப்போதுதான் முடிவோ..?
இரு அணிகளுமே சமபலத்துடன் திகழ்வதால் போட்டி கடுமையாக இருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கேவுக்கு எதிராக ஆடிய அதே ஆடும் லெவனுடன் தான் களமிறங்கியுள்ளது. அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணி:ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா.
கேகேஆர் அணியில் 4 வெளிநாட்டு வீரர்களாக எதிர்பார்க்கப்பட்ட படியே, சுனில் நரைன், இயன் மோர்கன், ஆண்ட்ரே ரசல் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் ஆடுகின்றனர்.
கேகேஆர் அணி:சுனில் நரைன், ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, இயன் மோர்கன், ஆண்ட்ரே ரசல், தினேஷ் கார்த்திக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), நிகில் நாயக், பாட் கம்மின்ஸ், குல்தீப் யாதவ், சந்தீப் வாரியர், ஷிவம் மாவி.