ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கேவிடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அபுதாபியில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
இரு அணிகளுமே பேட்டிங், பவுலிங், ஆல்ரவுண்டர்கள் ஆகியவற்றில் சமபலத்துடன் திகழும் அணி. ரோஹித் சர்மா, டி காக், சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு என மும்பை இந்தியன்ஸூம், ஷுப்மன் கில், சுனில் நரைன், தினேஷ் கார்த்திக், நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரசல், இயன் மோர்கன் என கேகேஆர் அணியும் மிரட்டலான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது. பவுலிங்கிலும் மும்பை இந்தியன்ஸில் பும்ரா, போல்ட் என்றால் கேகேஆரில் கம்மின்ஸ் இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இந்திய பவுலர்கள் பிரசித் கிருஷ்ணா, ஷிவம் மாவி ஆகியோர் உள்ளனர்.
கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவன்:சுனில் நரைன், ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, இயன் மோர்கன், ஆண்ட்ரே ரசல், தினேஷ் கார்த்திக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், குல்தீப் யாதவ், கமலேஷ் நாகர்கோடிசந்தீப் வாரியர், ஷிவம் மாவி, பிரசித் கிருஷ்ணா.
மும்பை இந்தியன்ஸ் அணியில் சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் இஷான் கிஷானுக்கு பதிலாக சவுரப் திவாரியும், குல்ட்டநைல் ஃபிட்னெஸுடன் இல்லாததால் ஜேம்ஸ் பாட்டின்சனும் ஆடினர். இந்த போட்டியில் இஷான் கிஷான் - சவுரப் திவாரி, குல்ட்டர்நைல் - பாட்டின்சன் ஆகிய நால்வரில் எந்த இருவர் இறங்குவார்கள் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்:ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரிஇஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, நேதன் குல்ட்டர்நைல்ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட், பும்ரா.