எல்லாரையும் இறக்கிவிட்டு பின்வரிசையில் இறங்குவது ஏன்..? சூட்சமத்தை சொன்ன தோனி.. சுதாரித்த எதிரணிகள்

First Published | Sep 23, 2020, 2:40 PM IST

சிஎஸ்கே அணியில் தோனி முன்வரிசையில் இறங்காமல் பின்வரிசையில் இறங்குவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்று வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸிடம் நேற்று தோற்றது.
ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சஞ்சு சாம்சனின் காட்டடி அரைசதம்(32 பந்தில் 74 ரன்கள்), ஸ்மித்தின் பொறுப்பான அரைசதம் மற்றும் ஆர்ச்சரின் கடைசி ஓவர் ருத்ரதாண்டவத்தால் 20 ஓவரில் 216 ரன்களை குவித்தது.
Tap to resize

217 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்ட களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சன் அதிரடியாக ஆடி 21 பந்தில் 33 ரன்கள் அடித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான முரளி விஜய் 21 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 21 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சாம் கரன், ருதுராஜ் கெய்க்வாட், கேதர் ஜாதவ் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, சிஎஸ்கே மீதான அழுத்தம் அதிகரித்தது.
இலக்கு கடினமானது என்பதால், நல்ல தொடக்கம் அமையாததால் டுப்ளெசிஸும் தோனியும் கடைசி வரை போராடியும் இலக்கை எட்டமுடியவில்லை. டுப்ளெசிஸ் கடுமையாக போராடி அரைசதம் அடித்தார். ஆனால் 19 வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதனால் 20 ஓவரில் 199 ரன்கள் அடித்த சிஎஸ்கே, 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
சாம் கரன், ருதுராஜ் கெய்க்வாட், கேதர் ஜாதவ் ஆகியோரை இறக்கிவிட்ட பின்னர், 7ம் வரிசையில் தான் தோனி களத்திற்கு வந்தார். ஒருவேளை தோனி கொஞ்சம் முன்வரிசையில் இறங்கியிருந்தால் டுப்ளெசிஸுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார்; அவரும் களத்தில் செட்டில் ஆகியிருப்பார் என்பதால், டெத் ஓவரில் பெரிய ஷாட்டுகளை அடித்து சிஎஸ்கே வெற்றி பெற்றிருக்கக்கூடும். மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியிலும் தோனி பின்வரிசையிலேயே இறங்கினார்.
இந்நிலையில், நேற்றைய போட்டிக்கு பின்னர் தோனியிடம், அவர் முன்வரிசையில் இறங்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, நான் பேட்டிங் ஆடி நீண்ட காலமாகிவிட்டது. 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதும் பின்னடைவாக அமைந்துவிட்டது. வித்தியாசமான சில முயற்சிகளை செய்து பார்க்கிறோம். சாம் கரனுக்கு பேட்டிங் ஆட போதிய வாய்ப்பளிக்கிறோம். இந்த முயற்சிகள் தோல்வியடைந்தால், எங்கள் பலம் என்னவோ, அதன்படியே செயல்பட தொடங்கி, அதையே தொடர்வோம் என்று தோனி தெரிவித்தார்.

Latest Videos

click me!