சிஎஸ்கேவின் தோல்விக்கு இதுதான் காரணம்.. குறிப்பிட்ட சில வீரர்களை விளாசி தள்ளிய தல தோனி

First Published Sep 23, 2020, 1:56 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோற்றதற்கான காரணத்தை சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று சிஎஸ்கேவும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதிய போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது. மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே, ராஜஸ்தானிடம் 2வது போட்டியில் தோற்றது.
undefined
ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரர் சஞ்சு சாம்சன், சிஎஸ்கேவின் சீனியர் ஸ்பின்னர்களான ஜடேஜா மற்றும் பியூஷ் சாவ்லாவின் பவுலிங்கை கங்கனம் கட்டி அடித்தார். அவர்களின் பவுலிங்கில் சிக்ஸர் மழை பொழிந்த சாம்சன், 19 பந்தில் அரைசதம் அடித்ததுடன், 32 பந்தில் 9 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 74 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
undefined
அவர் பேட்டிங் ஆடியபோது, ஒரு கட்டத்தில் தல தோனியே என்ன செய்வதென்று தெரியாமல் நிராயுதபாணியானார். அவர் ஆட்டமிழந்த பின்னர் ரன்ரேட் குறைந்தாலும், ஸ்மித் அவசரப்படாமல் நிதானமாக ஆடி அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 69 ரன்களுக்கு அவரும் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 4 சிக்ஸர்களை விளாசி இன்னிங்ஸை மிகச்சிறப்பாக முடித்துவைத்தார் ஆர்ச்சர். லுங்கி இங்கிடி வீசிய கடைசி ஓவரில் மட்டுமே 30 ரன்கள் எடுக்கப்பட்டன. அதனால் 20 ஓவரில் 216 ரன்களை குவித்த ராஜஸ்தான், சிஎஸ்கேவிற்கு 217 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
undefined
சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சன் அதிரடியாக ஆடி 21 பந்தில் 33 ரன்கள் அடித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான முரளி விஜய் 21 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 21 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சாம் கரன், ருதுராஜ் கெய்க்வாட், கேதர் ஜாதவ் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, சிஎஸ்கே மீதான அழுத்தம் அதிகரித்தது.
undefined
இலக்கு கடினமானது என்பதால், நல்ல தொடக்கம் அமையாததால் டுப்ளெசிஸும் தோனியும் கடைசி வரை போராடியும் இலக்கை எட்டமுடியவில்லை. டுப்ளெசிஸ் கடுமையாக போராடி அரைசதம் அடித்தார். ஆனால் 19 வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதனால் 20 ஓவரில் 199 ரன்கள் அடித்த சிஎஸ்கே, 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
undefined
சிஎஸ்கே அணியின் ஸ்பின்னர்களான ஜடேஜாவும் பியூஷ் சாவ்லாவும் சாம்சனுக்கு காலுக்கு கீழே தூக்கிப்போட்டு ரன்களை வாரி வழங்கினர். ஆனால் ராஜஸ்தான் ஸ்பின்னர்கள் ஷ்ரேயாஸ் கோபாலும் ராகுல் டெவாட்டியாவும் அருமையாக வீசி சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினர். இதை தோல்விக்கு முக்கிய காரணமாக சுட்டிக்காட்டினார் தோனி. முரளி விஜயின் மந்தமான தொடக்கம், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததையும் சுட்டிக்காட்டினார்.
undefined
சிஎஸ்கேவின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் தோனி, 217 என்ற பெரிய ஸ்கோரை விரட்டும்போது, நல்ல தொடக்கம் அமைய வேண்டும். ஆனால் எங்களுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. ஸ்மித்தும் சாம்சனும் அருமையாக பேட்டிங் ஆடினர். ராஜஸ்தான் பவுலர்களுக்கு கண்டிப்பாக கிரெடிட் கொடுத்தே தீர வேண்டும். எங்கள் ஸ்பின்னர்கள் ஃபுல் லெந்த்தில் வீசி தவறிழைத்தனர். ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்பின்னர்கள், நல்ல லெந்த்தில் வீசினர். 200 ரன்களில் அவர்களை சுருட்டியிருந்தால் வென்றிருக்கலாம் என்று தோனி தெரிவித்தார்.
undefined
click me!