இந்தியாவின் அடுத்த யுவராஜ் சிங்.. டுவிட்டரில் பாராட்டு மழையில் நனையும் படிக்கல்

First Published Sep 21, 2020, 10:51 PM IST

சன்ரைசர்ஸுக்கு எதிரான ஐபிஎல்லின் அறிமுக ஐபிஎல் போட்டியிலேயே அபாரமாக ஆடி அரைசதமடித்த தேவ்தத் படிக்கல்லை அடுத்த யுவராஜ் சிங் என கிரிக்கெட் ரசிகர்கள் புகழ்ந்துவருகின்றனர்.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆர்சிபியும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, 20 ஓவரில் 163 ரன்களை அடித்து 164 ரன்களை சன்ரைசர்ஸுக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை சன்ரைசர்ஸ் அணி விரட்டிவருகிறது.
undefined
இந்த போட்டியில் ஆர்சிபி அணியில் பார்த்திவ் படேலை சேர்க்காமல் 20 வயது இளம் வீரரான தேவ்தத் படிக்கல்லை ஃபின்ச்சுடன் தொடக்க வீரராக இறக்கிவிட்டது ஆர்சிபி அணி. தன் மீதான நம்பிக்கையை வீணடிக்காமல் அருமையாக ஆடினார் தேவ்தத் படிக்கல்.
undefined
2வது ஓவரிலிருந்தே அடித்து ஆட தொடங்கிய தேவ்தத் படிக்கல், எந்தவித பதற்றமுமின்றி, மிகவும் துணிச்சலாகவும் அதேநேரத்தில் மிகத்தெளிவாகவும் அடித்து ஆடினார். கவர் திசை, மிட் விக்கெட், ஸ்டிரைட், லாங் ஆஃப், லாங் ஆன் என அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிட்டார். தேவ்தத் படிக்கல்லின் ஆட்டம் அபாரமாக இருந்தது.
undefined
எல்லாவிதமான ஷாட்டுகளையும் ஆடி அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிட்ட தேவ்தத் படிக்கல், 36 பந்தில் அரைசதம் அடித்தார். ஆர்சிபி அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்த படிக்கல், 42 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
undefined
20 வயதான இளம் இடது கை பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல்லின் அடுத்த யுவராஜ் சிங்காக பார்க்கப்படுகிறார். டுவிட்டரில் பாராட்டு மழையில் நனைந்துவருகிறார் படிக்கல்.
undefined
undefined
click me!