போடுற எல்லா பந்தையும் பவுண்டரிக்கு பறக்கவிடும் படிக்கல்.. ஆர்சிபிக்கு செம ஸ்டார்ட்

First Published Sep 21, 2020, 8:03 PM IST

ஆர்சிபி அணிக்கு அந்த அணியின் இளம் அதிரடி தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் அபாரமாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூருவும் மோதுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், பவுலிங்கை தேர்வு செய்தார்.
undefined
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், பிரியம் கர்க், அபிஷேக் ஷர்மா, மிட்செல் மார்ஷ், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், சந்தீப் ஷர்மா.
undefined
ஆர்சிபி அணி:ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ், ஜோஷ் ஃபிலிப்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, டேல் ஸ்டெய்ன், யுஸ்வேந்திர சாஹல்.
undefined
ஆர்சிபி அணியின் தொடக்க வீரராக ஃபின்ச்சுடன் யார் இறங்குவார் என்பது பெரும் சந்தேகமாக இருந்த நிலையில், 20 வயது இளம் வீரர் தேவ்தத் படிக்கல் தொடக்க வீரராக இறங்கினார்.
undefined
புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரை நிதானமாக எதிர்கொண்ட படிக்கல், 2வது ஓவரிலிருந்து அதிரடியை தொடங்கினார். சந்தீப் ஷர்மா வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரிகளையும், புவனேஷ்வர் குமார் வீசிய 3வது ஓவரில் ஒரு பவுண்டரியையும், நடராஜன் வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரிகளையும் விளாசி, ஆர்சிபி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். மிட்செல் மார்ஷ் வீசிய ஐந்தாவது ஓவரில் ஸ்டிரைட்டில் பறக்கவிட்டு பவுண்டரி அடித்தார்.
undefined
கவர் திசை, மிட் விக்கெட், ஸ்டிரைட் திசை என அனைத்து திசைகளிலும் பவுண்டரிகளை விளாசி மிரட்டினார். படிக்கல் அடித்து ஆடியதால், அவருக்கு முமெண்டம் மற்றும் ஃப்ளோவை தடுக்காமல் ஃபின்ச் சிங்கிள் மட்டுமே தட்டிக்கொடுத்தார்.
undefined
click me!