ஐபிஎல் 2020: SRH vs RCB.. ஆர்சிபி முதலில் பேட்டிங்..! ஃபின்ச்சுடன் தொடக்க வீரராக இறங்கும் 20 வயது இளம் வீரர்

First Published Sep 21, 2020, 7:26 PM IST

ஆர்சிபிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர், ஆர்சிபியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
 

ஐபிஎல் 13வது சீசன் கடந்த 19ம் தேதி தொடங்கிய நிலையில், இன்று நடக்கும் 3வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற வார்னர், பவுலிங்கை தேர்வு செய்தார்.
undefined
இரு அணிகளுமே மிகப்பெரிய ஹிட்டர்களை கொண்ட அபாயகரமான அணிகள். சன்ரைசர்ஸில் வார்னர், பேர்ஸ்டோ ஆகியோரும் ஆர்சிபி அணியில் கோலி, டிவில்லியர்ஸ், ஆரோன் ஃபின்ச் என பவர் ஹிட்டர்கள் நிறைந்த அணிகளுக்கு இடையேயான போட்டி என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
undefined
இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம். சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியில் இளம் வீரர் ப்ரியம் கர்க் அறிமுகமாகிறார். ஆர்சிபி அணியில் தேவ்தத் படிக்கல், ஐபிஎல்லில் தனது முதல் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
undefined
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், பிரியம் கர்க், அபிஷேக் ஷர்மா, மிட்செல் மார்ஷ், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், சந்தீப் ஷர்மா.
undefined
ஆர்சிபி அணி:ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ், ஜோஷ் ஃபிலிப்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, டேல் ஸ்டெய்ன், யுஸ்வேந்திர சாஹல்.
undefined
ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக யார் யார் இறங்குவது என்பது குறித்த பெரும் கேள்வி இருந்துவந்த நிலையில், அண்டர் 19 அணியிலும் உள்நாட்டு போட்டிகளிலும் தொடர்ந்து அசத்திய தேவ்தத் படிக்கல், ஃபின்ச்சுடன் தொடக்க வீரராக இறங்குகிறார்.
undefined
click me!