KKR vs KXIP: உன்னை நம்பியே நாங்க கெட்டது போதும்.. கிளம்புப்பா உனக்கு புண்ணியமா போகும்

First Published Oct 26, 2020, 4:31 PM IST

கேகேஆர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்ட நிலையில், எஞ்சிய ஒரு இடத்திற்கு கேகேஆர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
undefined
11 போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் நான்காமிடத்தில் இருக்கும் கேகேஆர் அணியும், 11 போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாமிடத்தில் இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன. பிளே ஆஃபிற்கான கடைசி இடத்திற்கு போட்டியிடும் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி என்பதால் இன்றைய போட்டி கடுமையாக இருக்கும். நீயா நானா என்று கேகேஆர் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இந்த போட்டி, ஷார்ஜாவில் நடக்கிறது.
undefined
முதல் 7 போட்டிகளில் வெறும் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றிருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கெய்ல் மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் வருகைக்கு பிறகு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே வலுப்பெற்று, சிறந்த அணி காம்பினேஷனுடன், அடுத்த 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
undefined
இந்நிலையில், கேகேஆருக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இறங்கும் பஞ்சாப் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்புடன் ரூ.10.75 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல், இந்த சீசனில் 10 போட்டிகளில் பேட்டிங் ஆடி வெறும் 102 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். பஞ்சாப் அணிக்கு வெற்றி பெற்று கொடுக்கக்கூடிய கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் வீணடித்து, ஒரு போட்டியில் கூட உருப்படியாக பேட்டிங் ஆடாத மேக்ஸ்வெல், பஞ்சாப் அணியில் ஏன் என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.
undefined
கடந்த சில போட்டிகளில் பவுலிங்கில் பங்களிப்பு செய்தாலும், அவரது ஒரிஜினல் ரோலான பேட்டிங்கை இதுவரை சரியாக ஆடவில்லை. இப்போது ஆடுவார், அப்போது ஆடுவார், அடுத்த போட்டியில் ஆடுவார் என்று நம்பி நம்பியே பஞ்சாப் அணி ஏமாந்துவிட்டது.
undefined
எனவே இன்றைய போட்டியில் அவர் நீக்கப்பட்டு ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. நீஷம் அதிரடியான பேட்டிங் மட்டுமல்லாது பவுலிங் ஆப்சனாகவும் இருப்பார் என்பதால் அவர் சேர்க்கப்படலாம்.
undefined
மேலும் காயத்தால் கடந்த போட்டியில் ஆடாத மயன்க் அகர்வால் இன்று ஆடுவார். அதனால் அவருக்கு பதிலாக கடந்த போட்டியில் ஆடிய மந்தீப் சிங் அணியிலிருந்து நீக்கப்படுவார்.
undefined
உத்தேச கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரான், ஜிம்மி நீஷம், கிறிஸ் ஜோர்டான், தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், முருகன் அஷ்வின், அர்ஷ்தீப் சின், முகமது ஷமி.
undefined
கேகேஆர் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவனுடன் தான் களமிறங்கும்.
undefined
உத்தேச கேகேஆர் அணி:ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), இயன் மோர்கன்(கேப்டன்), பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி, லாக்கி ஃபெர்குசன், பிரசித் கிருஷ்ணா.
undefined
click me!