ஐபிஎல் 2020: கேப்டன் தான் அந்த டீமுக்கு பிரச்னையே.. முதல்ல நீ கிளம்புப்பா.. டீம் தேறிடும்..! கம்பீர் அதிரடி

First Published Oct 26, 2020, 3:26 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தான் பிரச்னையே என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்ட நிலையில், நான்காவது இடத்திற்கு கேகேஆர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது.
undefined
ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஆரம்பத்தில் முதலிடத்தில் இருந்தது. அதன்பின்னர் தொடர் தோல்விகளை தழுவி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.
undefined
முதல் 2 போட்டிகளில் அபாரமாக ஆடிய சஞ்சு சாம்சன், அதன்பின்னர் சரியாக ஆடாத நிலையில், சீசனின் பாதியில் ராஜஸ்தான் அணியில் இணைந்த மிகச்சிறந்த ஆல்ரவுண்டரும் மேட்ச் வின்னருமான பென் ஸ்டோக்ஸ் சரியாக ஆடவில்லை. அவர் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
undefined
இந்நிலையில், சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக பென் ஸ்டோக்ஸும் சஞ்சு சாம்சனும் அதிரடியாக பேட்டிங் ஆடி அசத்தினர். ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி சதமடிக்க, சாம்சன் அரைசதம் அடிக்க, 196 ரன்கள் என்ற இலக்கை 19வது ஓவரிலேயே அடித்து ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
undefined
ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் சீசனின் ஆரம்பத்தில் சிறப்பாக ஆடிய நிலையில், மிடில் ஆர்டர் சொதப்பியது. பின்னர் டெவாட்டியா, ரியான் பராக் நம்பிக்கையளிக்க, டாப் ஆர்டர் சொதப்பியது. ஆனால் இப்போது பென் ஸ்டோக்ஸ், சாம்சன், டெவாட்டியா ஆகியோர் சிறப்பாக ஆடுவதால் அந்த அணியின் பேட்டிங் பிரச்னை தீர்ந்துவிட்டது.
undefined
ஆனால் பவுலிங்கில் ஆர்ச்சரை தவிர வேறு யாருமே சரியாக வீசுவதில்லை. இளம் பவுலர் கார்த்திக் தியாகி சிறப்பாக வீசுகிறார். ஆனால் மும்பை அணி போன்ற சாம்பியன் அணிக்கு எதிராகவும், பவர் ஹிட்டர்கள் ஆக்ரோஷமாக அடிக்க ஆரம்பித்துவிட்டாலும், அனுபவமின்மை காரணமாக பதற்றத்தால் கூடுதல் தவறு செய்கிறார். அவர் நல்ல பவுலர் தான் என்றாலும், அங்கித் ராஜ்பூத் இடத்தில் ஒரு தரமான ஃபாஸ்ட் பவுலரை ஆடவைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
undefined
இந்நிலையில், ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித் தான் அந்த அணிக்கு பெரிய பிரச்னை என்றும், அவராகவே ஒதுங்கிக்கொண்டு, நல்ல ஃபாஸ்ட் பவுலர் ஒருவரை அணியில் சேர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
undefined
இதுகுறித்து கருத்து தெரிவித்த கம்பீர், உண்மையாகவே ராஜஸ்தான் ராயல்ஸூக்கு ஸ்டீவ் ஸ்மித் தான் பெரிய பிரச்னையே. இது நான் முதல் நாளிலிருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஸ்மித் அவராகவே ஒதுங்கிக்கொண்டு, ஒஷேன் தாமஸ் அல்லது ஒரு தரமான வெளிநாட்டு ஃபாஸ்ட் பவுலர் அணியில் இணைய வழிவகை செய்ய வேண்டும். அப்படி செய்தால், ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஒரு தரமான ஃபாஸ்ட் பவுலிங் பார்ட்னர் கிடைப்பார்.
undefined
யார் கேப்டனாக இருந்தாலும் ஜோஃப்ரா ஆர்ச்சரை சிறப்பாகவே பயன்படுத்துவார்கள். டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியென்று நினைக்கிறேன். ஆர்ச்சர் பவர்ப்ளேயில் 2 ஓவர்கள் தான் வீசினார். ஆனால் 10 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை பவர்ப்ளேயிலேயே வீழ்த்திவிட்டார். எனவே இன்னொரு தரமான வெளிநாட்டு ஃபாஸ்ட் பவுலர் அணியில் இருந்தால், பவர்ப்ளேயில் ஆர்ச்சரை 3 ஓவர்கள் வீசவைக்க முடியும். அதன்மூலம் பவர்ப்ளேயிலேயே ராஜஸ்தான் ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
undefined
click me!