காட்டடி அடித்த ஹர்திக் பாண்டியா.. இஷான் கிஷனும் அபார பேட்டிங்..! முடிஞ்சா அடிங்கடா.. ராஜஸ்தானுக்கு கடின இலக்கு

First Published Oct 25, 2020, 9:33 PM IST

ஹர்திக் பாண்டியாவின் கடைசி நேர காட்டடியால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 195 ரன்களை குவித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 196 ரன்கள் என்ற கடின இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் நடந்துவருகிறது. இந்த போட்டியிலும் ரோஹித் சர்மா ஆடாததால், பொல்லார்டு தான் கேப்டன்சி செய்தார். டாஸ் வென்ற பொல்லார்டு பேட்டிங்கை தேர்வு செய்தார்.
undefined
மும்பை இந்தியன்ஸின் தொடக்க வீரர்களாக டி காக்கும் இஷான் கிஷனும் களமிறங்கினர். ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே சிக்ஸர் பறக்கவிட்ட டி காக், அதற்கடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் இஷான் கிஷனும் சூர்யகுமார் யாதவும் இணைந்து அதிரடியாக ஆடி மும்பை அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர்.
undefined
இஷான் கிஷனும் சூர்யகுமார் யாதவும் இணைந்து 10 ஓவரில் 83 ரன்களை குவித்தனர். இஷான் கிஷன் 37 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 40 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த பொல்லார்டு 6 ரன்களுக்கு 13வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
undefined
அதன்பின்னர், சவுரப் திவாரியுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். சவுரப் திவாரி தனது பணியை செவ்வனே செய்தார். 25 பந்தில் 34 ரன்கள் அடித்து திவாரி ஆட்டமிழக்க, டெத் ஓவர்களில் ஹர்திக் பாண்டியா பொளந்து கட்டிவிட்டார். இந்த சீசனில் இதுவரை பாண்டியா அவரது இயல்பான பவர் ஹிட்டிங் ஆடவில்லை. அவர் எப்போது அடித்து நொறுக்குவார் என்று எதிர்பார்த்த மும்பை அணிக்கும் ரசிகர்களுக்கும், பாண்டியாவின் இந்த இன்னிங்ஸ் செம ட்ரீட்.
undefined
அங்கித் ராஜ்பூத் வீசிய 18வது ஓவரில் 4 சிக்ஸர்களை விளாசினார் ஹர்திக் பாண்டியா. அந்த ஓவரில் 27 ரன்கள் அடிக்கப்பட்டது. 19வது ஓவரை ஆர்ச்சர் அருமையாக வீசி, ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன், வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கார்த்திக் தியாகி வீசிய கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை ஹர்திக் பாண்டியா விளாச, கடைசி ஓவரிலும் 27 ரன்கள் கிடைத்தது. 18 மற்றும் 20 ஆகிய 2 ஓவர்களில் மட்டும் 54 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஹர்திக் பாண்டியா 21 பந்தில் 60 ரன்களை குவித்தார். ஹர்திக் பாண்டியாவின் காட்டடியால் 20 ஓவரில் 195 ரன்களை குவித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 196 ரன்கள் என்ற கடின இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
undefined
இன்றைய தினம் ஹர்திக் பாண்டியாவினுடையது. வெறும் இரண்டே ஓவரில் ஆட்டத்தை தலைகீழாக மாற்றிவிட்டார் ஹர்திக் பாண்டியா.
undefined
click me!