கேஎல் ராகுல் அடித்த ஸ்கோரை கூட அடிக்காமல் படுகேவலமா தோற்ற ஆர்சிபி.! புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப்

First Published Sep 24, 2020, 11:34 PM IST

ஆர்சிபி அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் படுதோல்வியடைந்தது.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் ஆர்சிபி அணியும் மோதின. துபாயில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் கோலி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
undefined
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணிக்கு தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 57 ரன்கள் அடித்தனர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த 26 ரன்கள் அடித்த சாஹலின் பந்தில் ஆட்டமிழந்தார்.
undefined
அதன்பின்னர் கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்த பூரான், மேக்ஸ்வெல் என யாருமே சரியாக ஆடவில்லை. ஆனால் ஒருமுனையில் மற்றவர்கள் சொதப்பினாலும் மறுமுனையில் கேஎல் ராகுல் களத்தில் நன்றாக செட்டில் ஆகி, தனக்கே உரிய பாணியில், ஸ்டைலிஷாகவும், அதேவேளையில் மிகத்தெளிவாகவும் பெரிய ஷாட்டுகளை ஆடி சதமடித்தார்.
undefined
கடைசி 2 ஓவர்களில் காட்டடி அடித்தார் கேஎல் ராகுல். ஸ்டெய்ன் வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசிய ராகுல், அந்த ஓவரில் மட்டுமே 26 ரன்களை குவித்தார். துபே வீசிய கடைசி ஓவரில் கருண் நாயர் ஒரு பவுண்டரியும், ராகுல் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியும் விளாச, 20 ஓவரில் பஞ்சாப் அணி 206 ரன்களை குவித்து 207 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது. ராகுல் 69 பந்தில் 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 132 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.
undefined
இதையடுத்து 207 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு ஆரம்பம் முதலே நெருக்கடி இருந்தது. அதை அதிகப்படுத்தும் விதமாக தேவ்தத் படிக்கல் ஒரு ரன்னிலும் ஜோஷ் ஃபிலிப் ரன்னே அடிக்காமலும் கேப்டன் கோலி ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்க, 4 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது ஆர்சிபி.
undefined
அதன்பின்னர் டிவில்லியர்ஸும் ஃபின்ச்சும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால் அதை பஞ்சாப் அணியின் ரிஸ்ட் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் அனுமதிக்கவில்லை. ஃபின்ச்சை 20 ரன்களில் பிஷ்னோய் வீழ்த்த, டில்லியர்ஸை 28 ரன்களில் தமிழகத்தை சேர்ந்த மற்றொரு ரிஸ்ட் ஸ்பின்னரான முருகன் அஷ்வின் வீழ்த்தினார். அதன்பின்னர் வாஷிங்டன் சுந்தர் மட்டும் 30 ரன்கள் அடித்தார். மற்ற அனைவரும் மளமளவென ஆட்டமிழக்க, 17 ஓவரில் 109 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி 97 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி தோற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் பஞ்சாப் அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
undefined
ஆர்சிபி அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் தோற்றது என்று சொல்வதை விட கேஎல் ராகுலிடம் தோற்றது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் கேஎல் ராகுல் ஒருவர் அடித்த ஸ்கோரைக்கூட ஆர்சிபி மொத்த அணியும் அடிக்கவில்லை. கேஎல் ராகுலின் ஸ்கோரை விட 23 ரன்கள் குறைவாக அடித்து படுமோசமாக தோற்றது. பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக 2 ரிஸ்ட் ஸ்பின்னர்களான முருகன் அஷ்வினும் ரவி பிஷ்னோயும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
undefined
click me!