டுபிளெசிஸ்யே அப்பிடித்தான் நடத்துனீங்க என்ன நீங்க நடத்துறத நெனச்சா வலிக்குது CSK நிர்வாகத்தை தாக்கிய தாஹிர் .

First Published Oct 23, 2020, 8:50 AM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பின்றி தவித்து வரும் மூத்த வீரர் தாஹிர் அது குறித்து மனம் திறந்துள்ளார். கடந்த வருடம் டுபிளெசிஸ் வாய்ப்பின்றி வாட்டர் பாய் வேலை பார்த்ததாகவும், இந்த ஆண்டு தான் அந்த வேலையை செய்து வருவதாகவும் கூறினார் அவர். அது மிகவும் வலியை தரக் கூடிய விஷயம் என்றும் அவர் கூறி அதிர வைத்துள்ளார்.

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பரிதாப நிலையில் உள்ளது. 10 லீக் போட்டிகளில் 7 தோல்விகளை சந்தித்துள்ளது அந்த அணி. அந்த அணி பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது. திட்டமே இல்லாமல் ஆடி சிஎஸ்கே அணி இந்த நிலையை அடைந்துள்ளது
undefined
அனுபவ சுழற் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிருக்கு அணியில் இடம் கிடைக்காமல் போனது. கடந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த அவருக்கு அணியில் இடம் இல்லாதது சிஎஸ்கே அணியின் சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்தது
undefined
இந்த நிலையில் இம்ரான் தாஹிர் தனது நிலை குறித்து புலம்பி இருக்கிறார். அதுவும் டெல்லி அணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினின் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கடந்த ஆண்டு பாப் டுபிளெசிஸ்-க்கு ஏற்பட்ட நிலை இந்த ஆண்டு தனக்கு ஏற்பட்டதாக கூறி புலம்பினார்
undefined
தனக்கு அணியில் இடம் கிடைக்காதது பற்றி பேசினார். "எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியவில்லை. முன்பு பாப் டுபிளெசிஸ் ஒரு சீசன் முழுவதும் வாட்டர் பாயாக தண்ணீர் சுமந்து கொண்டிருந்தார். அது மிகவும் வலிக்கக் கூடியது என்றார்.
undefined
இந்த ஆண்டு அதை நான் செய்கிறேன். பாப் டுபிளெசிஸ் எப்படி உணர்ந்திருப்பார் என எனக்கு இப்போது புரிகிறது. அவர் நல்ல டி20 சராசரி வைத்துள்ள வீரர். இது குறித்து அவரிடம் நான் பேசியும் இருக்கிறேன் என புலம்பினார் இம்ரான் தாஹிர்.
undefined
click me!