RR vs SRH: சன்ரைசர்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. ஸ்மித் - வார்னர் முரண்பட்ட கருத்து

First Published | Oct 22, 2020, 7:25 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், பவுலிங்கை தேர்வு செய்தார்.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன. இரு அணிகளுக்குமே பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பு உயிர்ப்புடன் இருப்பதால், அதை தக்கவைக்க இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.
இரு அணிகளுமே வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் இந்த போட்டி துபாயில் நடக்கிறது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர், பவுலிங்கை தேர்வு செய்தார்.
Tap to resize

இந்த மைதானத்தில் நடந்த கடந்த போட்டி ஆடப்பட்ட அதே பிட்ச்சில் தான் இந்த போட்டியும் ஆடப்படுகிறது. 2வது இன்னிங்ஸில் டியூவால் பந்து கொஞ்சம் வேகமாக வரும். எனவே 2வது பேட்டிங் ஆட விரும்புவதாக வார்னர் கூறினார்.
இதையடுத்து டாஸ் குறித்து பேசிய ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித், நாங்கள் முதலில் பேட்டிங் ஆடத்தான் விரும்பினோம். 2வது இன்னிங்ஸில் பிட்ச் ஸ்லோவாகும் என்பதால் முதலில் பேட்டிங் ஆடவே விரும்பினோம்.
இவ்வாறாக இருவருமே பிட்ச் குறித்தும் கண்டிஷன் குறித்தும் முரணான கருத்தை தெரிவித்தனர். இருவரில் யார் கூறியது நடக்கப்போகிறது என்பதையும் இருவரின் வியூகங்களில் யாருடையது வெல்லப்போகிறது என்பதையும் பார்ப்போம்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேன் வில்லியம்சன் காயம் காரணமாக ஆடாததால், அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளார். ஜேசன் ஹோல்டர் ஃபாஸ்ட் பவுலர் என்பதால், அவர் சேர்க்கப்பட்டதால் கூடுதல் ஸ்பின்னர் தேவை என்ற வகையில் பாசில் தம்பி நீக்கப்பட்டு ஷாபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, ஜேசன் ஹோல்டர், பிரியம் கர்க், விஜய் சங்கர், அப்துல் சமாத், ஷாபாஸ் நதீம், ரஷீத் கான், சந்தீப் ஷர்மா, டி.நடராஜன்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் அந்த அணி களமிறங்குகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), ஜோஸ் பட்லர், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷ்ரேயாஸ் கோபால், அங்கித் ராஜ்பூத், கார்த்திக் தியாகி.

Latest Videos

click me!