ஐபிஎல் 2020: காலம்போன காலத்துல தோனிக்கு அட்வைஸ் கொடுக்கும் அகார்கர்

First Published Oct 22, 2020, 8:30 PM IST

சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு அஜித் அகார்கர் ஒரு ஆலோசனை தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் சிஎஸ்கே அணிக்கு கொடுங்கனவாக அமைந்திருக்கிறது. ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற ஒரே அணி என்ற சாதனைக்கு சொந்தக்கார சிஎஸ்கே அணி, இந்த சீசனில் அந்த பெருமையை இழக்கிறது.
undefined
இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே சரியான அணி காம்பினேஷன் அமையாததாலும், தவறான அணி தேர்வாலும், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே அணி, 10 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
undefined
எனவே இனிமேல் இந்த சீசனில் சிஎஸ்கே பிளே ஆஃபிற்கு முன்னேற முடியாது. எஞ்சிய 4 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து பரிசோதனைகளை செய்யும் முனைப்பில் சிஎஸ்கே உள்ளது.
undefined
இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்த ஆலோசனைகள் பல தரப்பிலிருந்தும் வந்துகொண்டிருந்த நிலையில், சிஎஸ்கே அணி சீசனை விட்டே வெளியேறும் தருணத்தில், அகார்கர் தோனிக்கு ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளார்.
undefined
தோனியின் பேட்டிங் ஆர்டர் குறித்து பேசிய அஜித் அகார்கர், என்னை பொறுத்தமட்டில், தோனி ஐந்தாம் வரிசைக்கும் கீழாக பேட்டிங்கிற்கு வரக்கூடாது. சூழ்நிலைக்கேற்ப தான் தோனி இறங்குவார். ஆனாலும் ஐந்தாம் வரிசைக்கு கீழ் இறங்கக்கூடாது.
undefined
தோனி மிகச்சிறந்த கிரிக்கெட் மூளை. அணியின் பிராக்ரஸை கருத்தில் கொண்டு செயல்படுபவர். அவரது பேட்டிங் ஃபார்மும் கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டிருக்கிறது. எனவே அவர் ஐந்தாம் வரிசைக்கு பின்னால் ஆடக்கூடாது என்று அகார்கர் தெரிவித்துள்ளார்.
undefined
click me!