ஐபிஎல்லில் முறியடிக்கவே முடியாத 5 சாதனைகள்..!

First Published Sep 5, 2020, 5:13 PM IST

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் நடந்திருக்கும் நிலையில், இதுவரை செய்யப்பட்ட சாதனைகளில் இனிமேல் முறியடிக்க முடியாத சில சாதனைகளை பார்ப்போம்.
 

1. கிறிஸ் கெய்ல் - ஒரே ஓவரில் 37 ரன்கள் அடித்த சாதனைகிறிஸ் கெய்ல் ஆர்சிபி அணியில் ஆடியபோது 2011ல் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு எதிரான போட்டியில், கொச்சி அணியின் பிரசாந்த் பரமேஸ்வரன் என்ற பவுலரின் ஒரே ஓவரில் 37ரன்கள் அடித்தார். அந்த குறிப்பிட்ட ஓவரில் அடிக்கப்பட்ட ரன்கள்: 4, 6+1(nb), 4, 4, 6, 6 மற்றும் 4. ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்தால் கூட அதிகபட்சமாக 36 ரன்கள் தான் அடிக்க முடியும். எனவே கிறிஸ் கெய்ல் ஒரு ஓவரில் 37 ரன்களை குவித்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது.
undefined
2. கிறிஸ் கெய்ல் - 30 பந்தில் சதம், அதிகபட்ச ஸ்கோர 1752013ல் ஆர்சிபி அணியில் ஆடிய கிறிஸ் கெய்ல், புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 30 பந்தில் சதமடித்தார். ஐபிஎல்லின் அதிவேக சதம் இதுதான். அதுமட்டுமல்லாது, அந்த போட்டியில் 13 பவுண்டரிகள் மற்றும் 17 சிக்ஸர்களுடன் 175 ரன்களை குவித்தார் கெய்ல். இதுதான் ஐபிஎல்லில் ஒரு வீரர் ஒரு இன்னிங்ஸில் அடித்த அதிகபட்ச ஸ்கோர். இதை இனிமேல் முறியடிப்பதும் கஷ்டம்.
undefined
3. விராட் கோலி - ஒரு சீசனில் அதிபட்ச ஸ்கோர்(973 ரன்கள் - 2016 ஐபிஎல்)2008ம் ஆண்டில் ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் ஆடிவரும் விராட் கோலி, 2015 வரை ஐபிஎல்லில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஆனால் 2016 ஒரே சீசனில் 4 சதங்களை விளாசிய கோலி, அந்த சீசனில் அதிகபட்சமாக 973 ரன்களை குவித்தார். 2016 ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் ஆடி 81.08 என்ற சராசரியுடன் 973 ரன்களை குவித்தார் கோலி. இதுதான் ஒரு சீசனில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இதை இனிமேல் யாரும் முறியடிக்க முடியாது. ஒரு சீசனில் 800 ரன்கள் அடித்தாலே பெரிய விஷயம். எனவே கோலியின் இந்த சாதனை தகர்க்க முடியாத சாதனை.
undefined
4. சிஎஸ்கே ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிசிஎஸ்கே அணி இதுவரை 10 சீசன்களில் ஆடியுள்ளது. 2016 மற்றும் 2017 ஆகிய 2 சீசன்களிலும் சிஎஸ்கே அணி ஆடவில்லை. ஆனால் ஆடிய 10 சீசன்களிலும் சிஎஸ்கே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றது. இந்த சாதனைக்கு சிஎஸ்கே மட்டுமே சொந்தக்கார அணி. வேறு எந்த அணியும் இந்த சாதனையை செய்ததில்லை. இனிமேல் செய்வதற்கும் வாய்ப்பே இல்லை. சிஎஸ்கே இனிமேல் வரும் ஏதாவது ஒரு சீசனில் பிளே ஆஃபிற்கு தகுதிபெறாமல், இந்த சாதனை பயணத்திலிருந்து விடுபட்டாலும் படலாம்.
undefined
5. மும்பை இந்தியன்ஸ் அதிகபட்ச ரன் வித்தியாசத்திலான வெற்றி2017 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 213 ரன்களை குவித்த மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி அணியை வெறும் 66 ரன்களுக்கு சுருட்டி 146 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. 146 ரன்கள் வித்தியாசத்திலான அபார வெற்றியை இனிமேல் வேறு எந்த அணியும் பெற வாய்ப்பில்லை.
undefined
click me!